NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எனக்கு உரிமையுள்ளது!: கிரண் பேடி !!

       புதுச்சேரி சட்டசபையில் உரை நிகழ்த்த எனக்கு உரிமை இருக்கிறது என்று, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.

     அனைத்து மாநிலங்களிலும் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம் நடைபெறும்போது அதில் அந்தந்த மாநில கவர்னர் உரை நிகழ்த்துவது மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநிலத்திலும் அதேபோல ஆண்டின் முதல் கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்துவது வழக்கம்.


புதுச்சேரியில் இந்த ஆண்டு முதல் சட்டசபை கூட்டம் வருகிற 24ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கூட்டத்தில் கவர்னர் உரை இடம்பெறும் என்று அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

புதுச்சேரி அமைச்சரவைக்கும் கவர்னருக்கும் இடையே மோதல்போக்கு நடந்து வருகிறது. இதனால்தான் கவர்னர் உரை இல்லாமல் சட்டசபை கூட்டம் நடைபெறவுள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து கவர்னர் கிரண்பேடி ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி விவரம்:

கேள்வி: புதுச்சேரி சட்டசபை ஆண்டு முதல் கூட்டத்தை உங்களது (கவர்னர்) உரை இல்லாமல் நடத்தப்போவதாக தகவல் வந்துள்ளது. அதுபற்றி உங்களது கருத்து என்ன?

பதில்: மாநில நிர்வாகியாக இருப்பவர் (கவர்னர்) சட்டசபையில் உரை நிகழ்த்துவதற்கு எல்லா உரிமையையும் சட்டம் வழங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டத்திலும் கவர்னர் தனது உரைமூலம் உரிய செய்தியை வழங்குவது வழக்கமானது. சட்டம் இதைத்தான் சொல்கிறது.

கே: மீன்பிடித் துறைமுக மணல் அள்ளும் பணி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்குக் கொடுக்க இருந்த நிலையில் அதை, மத்திய அரசு நிறுவனத்துக்கு கொடுக்க முடிவு எடுத்ததன் பின்னணி காரணம் என்ன?

ப: மத்திய அரசு உதவியுடன் இந்தப் பணியை செய்ய முடிந்தால் அதுபற்றி நடவடிக்கை எடுங்கள் என்று மட்டும்தான் எங்கள் அலுவலகம் சிபாரிசு செய்தது. மற்றபடி, இந்தப் பணிகள் சம்பந்தமான முடிவுகளை அரசு செயலகம்தான் எடுத்தது. நாங்கள் அதில் தலையிடவில்லை.

கே: எம்.எல்.ஏ. தொகுதி வளர்ச்சி நிதிக்காக வழங்கப்படும் ரூ.2 கோடியை அனுமதிக்க நீங்கள் ஒப்புதல் வழங்கவில்லை என்று எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டுகிறார்களே, இது உண்மையா?

ப: எம்.எல்.ஏ. தொகுதி நிதி தொடர்பான எந்தக் கோப்புகளும் இந்த நிதியாண்டில் கவர்னர் அலுவலகத்துக்கு வரவில்லை.

கே: அதிகாரிகள் நியமனம், அதிகாரிகள் மாற்றம், மூத்த அதிகாரிகளுக்கு பதவிக் காலம் நீட்டிப்பு போன்றவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் வழங்கவில்லை என்று அமைச்சரவை சார்பில் குற்றம் சாட்டப்படுகிறதே?

ப: 6 பி.சி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக கோப்பு வந்தது. நான் அதற்கு அனுமதியளித்துள்ளேன். மற்ற எந்த உத்தரவுகளும் அரசு மூலம் பிறப்பிக்கவில்லை. இது சம்பந்தமான எந்தக் கோப்புகளும் கவர்னர் அலுவலகத்தில் கிடப்பில் இல்லை. மற்றபடி, 20 பி.சி.எஸ். அதிகாரிகளை மாற்றுதல் வி‌ஷயம் விதிமுறைகளுக்கு மாறாக இருந்தது. ஒரு அதிகாரி குறிப்பிட்ட இடத்தில் 2 ஆண்டுகள் வரை பணியில் இருந்தபிறகுதான் மாற்ற முடியும் என்று விதிகள் உள்ளன. மாறுதலுக்கு முக்கியக் காரணம் இருந்தால் மட்டும்தான் மாற்ற முடியும். அதை மீறி மாற்றுவது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானதாக அமையும்.’ இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive