NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உயருமா? வருமான வரிவிலக்கு உச்சவரம்பு... துவங்கி விட்டது பட்ஜெட் பரபரப்பு

பிப்., 1ல், மத்திய பட்ஜெட் தாக்கலாகிறது.
முதன்முறையாக, ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் ஆகிய இரண்டும் கலந்த ஒருங் கிணைந்த பட்ஜெட், தாக்கலாக உள்ளது; இதில், வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப் படுமா என்ற எதிர்பார்ப்பு, மாத ஊதியதாரர் களிடையே ஏற்பட்டுள்ளது.

பட்ஜெட்டில், என்னென்ன விஷயங்கள் இடம் பெறும் என்பது குறித்த எதிர்பார்ப்பு, இப்போதே துவங்கி விட்டது. வழக்கம் போல், மாத ஊதிய தாரர்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட, பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள், இந்த பட்ஜெட்டில், தங்களுக்கு சாதகமான அம்சங்கள் வந்துவிடாதா என, ஆவலுடன் காத்திருக்கின் றனர். கடந்த சில ஆண்டுகளாக, ஆண்டு வருமான வரி உச்சவரம்பு, 2.5 லட்சம் ரூபாயை தாண்ட மறுக்கிறது. கடந்த ஆண்டும், ஏமாற்றமே மிஞ்சியது. அதனால், இந்த ஆண்டு, அது நிச்சயம் உயரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மாத வருவாயும், கடந்த சில ஆண்டுகளில், குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வரு கிறது. அதனால், குறைந்தபட்சம், 4.5 லட்சம் ரூபாய் முதல், ஐந்து லட்சம் ரூபாய் வரை யாவது, வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இன்சூரன்சுக்கு தனி கழிவு?
மாத ஊதியதாரர்கள்,80 - சி பிரிவில், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ செலவு, வீட்டுக் கடன் மாதத் தவணை, எல்.ஐ.சி., உள்ளிட் டவை, வரிக்கழிவிற்கு உதவுகின்றன. இதில் அதிகபட்சம், 1.5 லட்சம் ரூபாய் மட்டும் கழிக்க முடியும். இதை, 2.5 லட்சம் முதல், மூன்று லட்சம் ரூபாய் வரை உயர்த்தினால், மக்கள் சேமிப்பில் ஆர்வம் காட்டுவர்.
குறிப்பாக,இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு தனிக் கழிவு, 1 லட்சம் ரூபாய் வரை கொடுத்தால், சேமிக் கும் வழக்கம் மக்களிடம் அதிகரிக்கும்; சமூக பாது காப்பும் கிடைக்கும்.
இந்த பிரிவில், மருத்துவ செலவுகளுக்காக கழிக்கப்படும் தொகை, 15 ஆயிரம் ரூபாயாக, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது; அது, 30 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும். இது போல், மற்றோர் பிரிவான, 80 டிடிஏ - வில், வங்கி சேமிப்பு மீதான வட்டிக்கான வரி விதிப்பு குறைக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அப்படி செய்தால், 'செட்டில்மென்ட்' பணத்தின் மீதான வட்டியை நம்பியிருக்கும், 60 வயதிற்கு, மேற்பட்டோர் பயனடைவர்.
புதிய 'பென்ஷன்' திட்டம்
புதிய,'பென்ஷன்' திட்டத்தில் சேர்ந்தால்,ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை, 80 சிசிடி (1பி) பிரிவின் கீழ், வருமான வரி கழியும். இந்த பட்ஜெட்டில், முதலீடு தொகை முழுவதற்கும், நிதியமைச்சர் ஜெட்லி, விலக்களிக்க முயற்சிப்பார் என, தெரிகிறது.
வீட்டுக்கடன்வட்டிக்கான உச்சவரம்ரபு, பிரிவு 24 - ன் கீழ், 2 லட்சம் ரூபாயாக உள்ளது. வீடு விலை ராக் கெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது; எனவே, அதை உயர்த்த வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.
50 கோடி பேர் 'எஸ்கேப்'
நாட்டில், நான்கு கோடிக்கும் குறைவானவர் களே, குறிப்பாக, மாத வருமானம் பெறுவோர் தான், வரி செலுத்துகின்றனர். வருமான வரி வரம்பிற்குள்
வரக்கூடிய, மருத்துவர், வியாபாரிகள், சுய தொழில் வருவாய் மற்றும் வீட்டு வாடகை வருவாய் ஈட்டுவோர் உட்பட, 50 கோடிக்கும் அதிகமானோர், வருமான வரித்துறை வளையத்திற்குள் இன்னும் வரவில்லை.
அவர்களையும், வரிவிதிப்பு முறையின் கீழ் கொண்டு வர வேண்டும். அதற்கு, வரி விதிப்பு முறை எளிதாக வேண்டும். அதாவது, வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும்.
மேலும், ஐந்து லட்சத்திற்குள் வருமானம் இருந்தால், 10 சதவீத வரி விதிப்பு; ஐந்து லட்சத் திற்கு மேல், 20 சதவீதம்; 10 லட்சத்திற்கு மேல், 30 சதவீதம், வரி என்பதை குறைக்க வேண்டும். அப்போது தான், குடிமக்கள் அனைவரும் சமமாக நடத்தப்படும் நிலை உருவாகும்.
ஊக்கம் கிடைக்குமா?
பண மதிப்பிழப்பிற்கு பின், ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாற, அரசு ஊக்குவிப்பதால், 'கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங்' உள்ளிட்டவை போன்ற பரிவர்த்தனைக்கு, அரசு அதிக சலுகை அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive