NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சூப்பர் செய்தி…. இப்போ இதைக்கூட “ஷேர்” செய்யலாம்…

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்காக பேஸ்புக் நிறுவனம் புதிய வசதியை நேற்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.அதாவது, “லைவ் ஷேரிங்” எனப்படும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நாம் எங்கு இருக்கிறோம், எங்கு செல்கிறோம் என்பதை நாம் படத்துடன் தெரிவிக்க முடியும், அத்துடன் நமக்கு வேண்டியவர்களுடன் சாட்டிங்கிலும் ஈடுபடமுடியும்.
 உலகம் முழுவதும் 20 கோடி வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ்அப் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வழக்கமான “ஷேரிங்” வசதியைப் போல் இல்லாமல், அதாவது எந்த இடத்தில் நிலையாக இருக்கிறோமோ அதைக் குறிக்காமல்,  நாம் எந்த இடத்தில் சென்று இருக்கிறோமோ(“லைவ் ஷேரிங்” ) அந்த இடத்தை நமக்கு விருப்பப்பட்டவர்களுக்கு தெரிவிக்க முடியும். வாட்ஸ் அப் பயன்படுத்துவர்களின் பாதுகாப்புக்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் பயன்படுத்துவர்களின் தங்களின் நண்பர்கள்,  குடும்ப உறுப்பினர்களுக்கு தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோமா, நாம் செல்லும் இடத்துக்கு பாதுகாப்பாக அடைந்துவிட்டோமா என்பதை தெரிவிக்க இந்த வசதி பயன்படும்.
இதற்கு முன் உபர், ஸ்நாப் மேப் ஆகிய நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக இந்த வசதியை அறிமுகப்படுத்தி இருந்தன. இந்த நிறுவனங்களுக்கு அடுத்தார்போல் இப்போது வாட்ஸ்அப் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்தின் மேலாளர் ஜூகைர் கான் கூறுகையில், “ வாட்ஸ்அப் லைவ்ஷேரிங் வசதிக்காக கடந்த சில மாதங்களாக தீவிரமாக பணியாற்றினோம். அதன் பயனாக இப்போது நாம் செல்லும் இடங்களை நமக்குவிருப்பப்பட்டவர்களுக்கு அனுப்பும் வசதியை ஏற்படுத்தியுள்ளோம்” என்றார்.
எப்படி இந்த வசதியைப் பெறுவது?
வாட்ஸ் அப் பயன்படுத்திவருபவர்கள் கூகுங் ப்ளே ஸ்டோரில் சென்று, “அப்டேட்” செய்ய வேண்டும். அப்டேட் முடிந்தவுடன், நம்முடைய கான்டாக்ட் தளத்தில் சென்று யாருக்கு நம்முடைய இடத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோமோ அந்த இடத்தை புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டு, லைவ் சாட்டிங்கிலும் ஈடுபட முடியும். நாம் செல்லும் இடத்தை தனிப்பட்ட ஒரு நபருக்காகவோ அல்லது ஒரு குருப்புக்கோ பகிர்ந்து கொள்ள முடியும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive