Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வெள்ள சேத பகுதிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா பார்வையிட்டார்

     தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 28-ந்தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தாலும், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களையும் புரட்டி போடும் வகையில் மழை கொட்டி தீர்த்துள்ளது. 

         மழை வெள்ள சேத பகுதிகளை பார்வையிடவும், மீட்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்யவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்தார். நேற்றே அவர் சென்னை மாநகரம் மீது தாழ்வாக பறந்து வெள்ள சேதத்தை பார்க்க திட்டமிட்டார். ஆனால் வானிலை மோசமாக இருந்ததால் அவரால் செல்ல முடியவில்லை. 

இன்று (வியாழக்கிழமை) மழை இல்லாததால் வானிலை சீராக இருந்தது. இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். 

ஈக்காட்டுத்தாங்கல், கோட்டூர்புரம், அடையாறு, வேளச்சேரி, திருவொற்றியூர் பெரும்பாக்கம், ஊரப்பாக்கம், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர்  அசோக்நகர், வியாசர்பாடி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சடையான்குப்பம், மணலி புதுநகர், மற்றும் ரெட்டை ஏரி, புழல், பூண்டி ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, கொசஸ்தலை ஆறு ஆகியவற்றை பார்வையிட்டார். 

அப்போது, வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் உயர்தளங்களிலுள்ள அனைவருக்கும் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive