Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மழையால் பாதித்த பகுதி மக்களுக்கு உதவ ஆசிரியர்களுக்கு சிறப்பு அனுமதி தேவை - பாடசாலை கோரிக்கை




            தமிழகத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலூர், சென்னை போன்ற பகுதிகளில் மழையின் பாதிப்புகள் மிக அதிக அளவில் உள்ளது. மேலும் சென்னையில் வழக்கத்தை விட 89 சதவீதம் அதிக மழை இதுவரை பெய்துள்ளது. மழையின் பாதிப்புகளினால் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசின் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் உட்பட பல அரசு ஊழியர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். 


                     இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழகத்தின் இதர பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் பலரும் தயார் நிலையில் உள்ளனர். களத்தில் ஒருங்கிணைந்து செயல்பட ஆசிரியர்களால் மிக எளிதாக இயலும். எனவே சென்னை உட்பட மழை பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு அரசு சார்பில் உதவ இதர பகுதிகளில் உள்ள ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பாடசாலை தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கிறது.

                    ஆசிரியர்களுக்கு தேவையெல்லாம் - தமிழக அரசின் சிறப்பு அனுமதியும், ஆசிரியர் குழுக்களை ஒருங்கிணைக்க மாநகராட்சி தலைமை ஊழியர்களின் ஒத்துழைப்பும் தான்.

                       எனவே தமிழகம் முழுவதும் உள்ள முதன்மைக்கல்வி அலுவலர் மூலமாகவும், தொடக்கக்கல்வி அலுவலர் மூலமாகவும் ஒரு குழு ஏற்படுத்தி இப்பேரிடர் உதவி பணியில் பங்கு பெற விரும்பும் ஆசிரியர்களினை கணக்கெடுத்து அவர்களுக்கு உடனடியாக பள்ளிப்பணியிலிருந்து சிறப்பு அனுமதி வழங்கி, மழை பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் பொது மக்களுக்கு உதவி செய்ய தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்.

                        தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் பலரும், மழையால் பாதித்த பகுதிகளில் மக்கள் படும் துயரத்தை தொலைக்காட்சிகளில் கண்டு அவர்களுக்கு உதவ இயலவில்லையே என வருத்தத்தில் உள்ளனர். சேவை நோக்கில் உதவி செய்ய விரும்பும் ஆசிரியர்களுக்கு தேவையெல்லாம் ஒரு அனுமதி ஆணை மட்டுமே.

                         எனவே தமிழக அரசு பொது மக்களின் துயரத்தை களையவும், தேவையான உதவிகள் உடனுக்குடன் பொதுமக்களை சென்றயடையவும் ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு பணிவுடன் பாடசாலை கேட்டுக்கொள்கிறது.



நன்றி!
அன்புடன் - பாடசாலை.

Dear Readers - நமது கோரிக்கை குறித்த தங்கள் கருத்துகளை கீழே உள்ள கமெண்ட் பாக்சில் பதிவு செய்யவும்.

Please Friends, Please Share Our Article to Facebook, Twitter, Whatsapp!




40 Comments:

  1. ஆசிரியர்கள் சம்பளம் கூட்டி தர மட்டுமே கொடி பிடிப்பவர்கள் என்ற பொதுமக்களின் நினைப்பை மாற்றச் செய்துட்டீங்க!

    we are ready friends...

    ReplyDelete
  2. super! ready now....

    ReplyDelete
  3. நாங்களும் ரெடி... நடக்குமா?

    ReplyDelete
  4. I am also waiting for help to people...

    ReplyDelete
  5. First give your one month salary to govt. That's enough. Are u ready teachers to give your entire one month salary?

    ReplyDelete
    Replies
    1. தமிழக அரசு அனுமதி வழங்காமல் நமது சம்பளத்தொகையை நிவாரண நிதியாக வழங்க இயலாது. அவ்வாறு அனுமதி வழங்கும்போது நிச்சயம் அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப நிச்சயம் உதவுவார்கள். ஆனால் தற்போது தேவையெல்லாம் பணம் இல்லை, உடனடி உதவி, உதவி, உதவி.... நீங்கள் தயாரா?

      Delete
  6. We need to contribute our for affected people

    ReplyDelete
  7. அவர்களை மீட்க நானும் தயார்

    ReplyDelete
  8. We are ready to work...... Pls give permission.....

    ReplyDelete
  9. அவர்களை மீட்க நானும் தயார்

    ReplyDelete
  10. பாடசாலையின் உயரிய முயற்சிக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்... முறையான அனுமதி பெற பாடசாலை குழு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்...
    .
    மு.முத்துபிரபாகரன்,
    ஆங்கில பட்டதாரி ஆசிரியர்,
    அ.மே.நி.ப, புழுதிப்பட்டி,
    சிவகங்கை மாவட்டம்..

    ReplyDelete
  11. பாடசாலையின் உயரிய முயற்சிக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்... முறையான அனுமதி பெற பாடசாலை குழு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்...
    .
    மு.முத்துபிரபாகரன்,
    ஆங்கில பட்டதாரி ஆசிரியர்,
    அ.மே.நி.ப, புழுதிப்பட்டி,
    சிவகங்கை மாவட்டம்..

    ReplyDelete
  12. பாடசாலைக்கு வணக்கங்கள். தங்களின் சேவையை முழு மனதுடன் ஆதரிக்க ஆசிரியர்களாகிய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அதற்காக நாங்கள் செய்ய வேண்டிய துரித செயல்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வி இயக்குநர் (அ) கல்வி அதிகாரிகள் விரைவில் வகுத்துக் கொடுத்தால் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் உதவிகள் செய்யத் தயாராக உள்ளோம். அருகில் உள்ள மாவட்டங்கள் வாரியாக அதற்கான உயர் அதிகாரிகள் விரைந்து செயல்திட்டங்களை வகுத்துக் கொடுத்தால் மீட்புப் பணிகள் துரிதமடையும் என்று நம்புகிறோம்.

    மேலும்,
    தற்காலிக உதவியாக சென்னை மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள மாவட்ட நிர்வாகத்தினர் தற்காலிக செல்போன் கோபுரங்கள் ஏற்படுத்தி மக்களின் தகவல் தொடர்பினை உறுதிப்படுத்தினால் அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குத் தகவல் தெரிவிக்க உதவியாக இருக்கும். இதேபோல் கைபேசிக்கான தற்காலிக மின்னேற்றி மின்கலன்களை மின்சாரம் இல்லாத இடங்களில் ஏற்படுத்தினால் வீண் பதற்றத்தைத் தவிர்க்கலாம். ஏனெனில், இன்று காலை முதல் சென்னையில் வசிக்கும் சொந்தங்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் தாய் , தந்தை , மற்றும் உறவுகள் படும் துன்பத்தைச் சொல்லி மாளாது.


    ஆகவே, பாடசாலையின் இவ்வேண்டுகோளுக்கு ஆசிரியர்களின் ஆதரவு இப்பொழுதே உண்டு.

    பள்ளியில் பணிக்குத் தொடர்பில்லாத எவ்வளவோ வேலைகள் செய்கிறோம். ஆபத்தில் தவிப்பவர்களுக்கு களப்பணியாக இதைக் கூடவா செய்ய மாட்டோம்?

    ReplyDelete
    Replies
    1. சரியாக கூறியிருக்கிறார் நண்பர்!

      Delete
    2. நன்றி! திரு. சரவணன். காத்திருப்போம், அரசின் அனுமதிக்காக...

      Delete
  13. மனசாட்சியின் படி பள்ளியில் பாடம் நடத்தினாலே போதும். நிவாரண பணியை அந்தந்த துறைகள் கவனித்துக் கொள்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாடம் நடத்துவது மட்டுமே ஒரு ஆசிரியரின் கடமை ஆகாது நண்பரே! வருங்கால தலைமுறைக்கு முன்மாதிரியாக திகழ்வது தான் ஆசிரியர்களின் முதற்கடமை. அவ்வாறு இருக்க, களப்பணியாக பணியாற்ற அனுமதி கோருவதில் தவறில்லை.

      ” இவ்வளவு பள்ளத்தில் வீடு கட்டிய இந்த மக்களுக்கு புத்தி எங்கே போச்சு? - இதற்கு அனுமதி கொடுத்த அரசுக்கு என்ன ஆச்சு? ” - என்றெல்லாம் குறைகளை மட்டுமே கூறிக்கொண்டிருக்க தேனீர் கடைகளில் இருக்கும் சிலரே போதும். ஆசிரியர் என்பவர் நம்மால் இயன்றவரை மற்றவர்க்கு உதவுவதிலும் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதற்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு தான் அரசிடம் அனுமதி கோருகிறோம்!

      Delete
  14. அரசு ஊழியர்கள் தான் தோன்றித்தனமாக எதையும் செய்யக் கூடாது. பொது சேவையில் தங்களை இணைத்துக்கொள்ள முறையான அனுமதி தேவை. ஆசிரியர்கள் பலரும் களத்தில் பொது மக்களுக்கு உதவ விரும்பினாலும், அவர்களுக்கு வருட கடைசியில் விடுமுறை சிக்கல்கள் உண்டு. அதற்கும் தயார் என நினைத்தால் கூட ஆசிரியர்களை ஒருங்கிணைத்து நிவாரண உதவி மக்களை சென்றடையச் செய்ய அரசின் அனுமதி நிச்சயம் தேவை.

    பல்வேறு புதிய, புதிய தலைப்புகளில் பயிற்சி வழங்கும் கல்வித்துறை, பேரிடர் காலங்களில் ஒருங்கிணைந்து எவ்வாறு உதவுவது என பயிற்சியளித்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.

    அரசின் அனுமதிக்காக காத்திருப்போம் நண்பர்களே!

    ReplyDelete
  15. ஒரு மாதம் சம்பளத்தை தூக்கி கொடுக்கிட்டு டா. அவங்க குடும்பத்துக்கு யாரு காப்பாத்து வா? நீங்க யார் ஒரு ஆசிரியரா?

    ReplyDelete
  16. OK sir please all teachers get ready sir

    ReplyDelete
  17. Anonymous, நீங்க ரொம்ப அதிகம பேசுரிங்க...!
    எதையும் பாராட்ட கத்துக்கங்க உதாசிணபடுத்தாதிங்க...! ஆசிரியர்கள் ஆர்வத்திர்க்கும் பாடசாலை முயற்சிக்கு பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக எனது மனமார்ந்த நன்றி....!

    ReplyDelete
    Replies
    1. Sir eppa edhuvum peasakoodaadhu..porkaala udhavi theavai...mudindhal udhavi seiyyalam... Seibavargalai vimarsikka veandaam sir.....

      Delete
  18. Sir.vaadha pradhi vaadhangalai thavirthu udhavi mattum need.. They need help only... Kurai peasum nearam alla tharpodhu.....

    ReplyDelete
  19. மிகச் சரியான கருத்து. அனைவரது எண்ணமும் அதான். நம் மக்களுக்கு ஒடோடிசி சென்று உதவ இயல்வில்லையே என்ற எண்ணம் அனைத்து ஆசிரியர்களுக்கும் உள்ளத். நல்ல முயற்சி..

    ReplyDelete
  20. மிகச் சரியான கருத்து. அனைவரது எண்ணமும் அதான். நம் மக்களுக்கு ஒடோடி சென்று உதவ இயலவில்லையே என்ற எண்ணம் அனைத்து ஆசிரியர்களுக்கும் உள்ளது. நல்ல முயற்சி..

    ReplyDelete
  21. நிச்சயம் மக்களுக்கு உதவ ஆசிரியராகிய நான் தயாராக இருக்கிறேன்

    ReplyDelete
  22. D.LAKSHMI NARAYANAN Kanchipuram12/03/2015 7:51 am

    எங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும். தமிழ் நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர் காஞ்சிபுரம் மாவட்டம்.

    ReplyDelete
  23. பங்கேற்புப் படிவம் ஒன்றை இணையுங்கள். விருப்பம் உள்ளவர்கள் பெயர்களைப் பதிவு செய்யட்டும். அனுமதி கிடைத்தவுடன் களத்தில் இறங்க உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  24. Thanks to padasalai.I am also ready.Gbhss Tgm.

    ReplyDelete
  25. Good job paadasalai. We dont just do teaching . We are role models. Thank u for involving us . Im ready to serve pls contact 9786869980

    ReplyDelete
  26. Dont just concern about chennai alone. Have a look at Kadalur, Viluppuram, Thiruvallur, Kanchipuram

    ReplyDelete
  27. Dont just concern about chennai alone. Have a look at Kadalur, Viluppuram, Thiruvallur, Kanchipuram

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive