Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அனல் வெயில் முன்னெச்சரிக்கை; தலைமை செயலர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில், அனல் வெயிலில் பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, அரசு எடுத்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.

இதில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்:

* ஏப்., 21 முதல், அனைத்து பள்ளிகளுக்கும், கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம். உயர் கல்வி நிறுவனங்களில், தேர்வு எழுதும் மாணவர்கள், வெப்ப அலையால் பாதிக்கப்படாமல் இருக்க, சிறப்பு பஸ் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

* பொது மக்களுக்கு, மருத்துவ விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, தேவையான மருந்து பொருட்களை, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்

* கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் மருந்துகள், தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்

* கட்டுமான பணியாளர்களுக்கு அளிக்க வேண்டிய அறிவுரைகள் மற்றும் முன் எச்சரிக்கைகள் குறித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

* நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைகள் மூலம், பொது மக்கள் கூடும் இடங்களில், நிழல் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும்

* ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு, குடிநீர் மற்றும் நிழல் பந்தல் வசதி ஏற்படுத்த வேண்டும்

* அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில், வெப்ப அலை தாக்கத்தை எதிர்கொள்வதற்கான செயல் திட்டம் தயாரித்து, நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு தலைமை செயலர் அறிவுறுத்தினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive