ரயில்வே பாதுகாப்பு படையில் 20 ஆயிரம் கான்ஸ்டபிள் வேலை: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது!!!

இந்திய ரயில்வேயில் 2017-18 ஆம் ஆண்டுக்கு நிரப்பப்பட உள்ள 19,952 காவலர்கள் (Constable) பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) விரைவில் வெளியிடப்பட உள்ளது.  இதற்கான முழுமையான விவரங்களை RPF அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இந்த ஆண்டு சுமார் 20 ஆயிரம் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது ரயில்வே பாதுகாப்பு படை வாரியம்(RPF).  அப்படி வெளியாகும் அறிவிப்பு, வாய்ப்பை தவற விட்டவர்களுக்கும், வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கும் பெரிய வாய்ப்பாக இருக்கும் எனலாம்.
மொத்த காலியிடங்கள்: 19,952
பணியிடம்: இந்தியா முழுவதும்
பணி: Constable Railway Protection Force
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
- பொது பிரிவினர்: 8,901
- ஓபிசி பிரிவினர்: 4,371
- எஸ்சி பிரிவினர்: 3317
- எஸ்டி பிரிவினர்: 3363
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஆண் விண்ணப்பத்தாரர்கள் 165 செ.மீ உயரமும், பெண் விண்ணப்பதாரர்கள் 157 செ.மீ உயரமும் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
உடற்தகுதி நுழைவுத் தேர்வு: ஆண் விண்ணப்பப்பதாரர்கள் 1600 மீட்டர் ஓட்டத்திலும், பெண் விண்ணப்பதாரர்கள் 800 மீட்டர் ஓட்டத்திலும், நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதலில் தேர்ச்சி பெற வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, அளவீட்டு தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.40. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளமான www.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்

Share this

0 Comment to "ரயில்வே பாதுகாப்பு படையில் 20 ஆயிரம் கான்ஸ்டபிள் வேலை: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது!!! "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...