இன்று சந்திர கிரகணம் : பரிகாரம் யாருக்கு

ஆடி பவுர்ணமியான இன்று, சந்திரகிரகணம்நிகழ்வதையொட்டி பரிகாரம் நட்சத்திரத்தினர் குறித்த விபரம் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளது.
மகர ராசியில் திருவோண நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் கேது கிரகத்தால் இரவு 10:51 - 12:49 மணி வரை சந்திர கிரகணம் உண்டாகிறது. 
ரோகிணி, அஸ்தம், உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரம், திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் கோயில் வழிபாடு செய்து உளுந்து தானம் செய்வது நன்மையளிக்கும். கர்ப்பிணிகள் இரவு 9:00 - 3:00 மணி வரை நிலாவை பார்ப்பது கூடாது. அதன் பின் அதிகாலையில் நீராடி விட்டுசந்திர தரிசனம் செய்யலாம்.

Share this