NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வருமா? துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விளக்கம்

          ''மத்திய, மாநில அரசுகள் இடையே கருத்துஒற்றுமை ஏற்பட்டால் மட்டுமே, தேசிய அளவில் ஒரே பாடத்திட்டத்தை உருவாக்க முடியும்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, 68, தெரிவித்தார். 

 
நாடு,முழுவதும்,ஒரே,பாடத்திட்டம், துணை ஜனாதிபதி, வெங்கையா, விளக்கம் சென்னை அண்ணா பல்கலையில் நடந்த, 'புதிய இந்தியாவை உருவாக்குவோம்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்றார்.
ஒப்பந்தம்
மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
வேளாண்மைக்கும், உற்பத்திக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறி விட்டு, வெளிநாட்டு பொருட்களை இந்தியாவில் அனுமதிப்பது ஏன்?
சர்வதேச வர்த்தக அமைப்பில் நாம் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்தியாவில் தேவைக்கு அதிக உற்பத்தி உள்ளதால், அதை, நாம் ஏற்றுமதி செய்கிறோம். வெளிநாட்டு பொருட்களின் இறக்குமதியை தடை செய்தால், நம் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாது. மேலும், சர்வதேச அளவில், இந்தியாவின் நட்புறவில் சிக்கல் ஏற்படும்.
மதிப்பீட்டு முறை
வல்லரசு நாடாக மாறும் உறுதி ஏற்று விட்ட நிலையில், ௩௦ சதவீதம் பேர் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பது ஏன்?
மக்களின் கல்வியறிவை வளர்க்கவும், பொருளாதாரத்தை முன்னேற்றவும், பல நிதியுதவி, மானியம் ஆகியவை வழங்கப்படுகிறது.மக்களுக்கு வழங்கப்பட்ட மானியம், வேறு வகையில் சென்று கொண்டிருந்தது. அதை மாற்றவே, நேரடி மானிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய அளவில் ஒரே வகை பாடத்திட்டம் உருவாக்க முடியாதா?
இந்தியாவில் பல்வேறு பாடத்திட்டம், பாடங்கள், பயிற்று முறை, தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறை உள்ளது.
கல்வி கொள்கை
இங்கே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயர், மற்ற மாநிலத்தவருக்கு தெரியாது. அங்கே உள்ள தியாகிகளின் பெயர், இங்கே தெரியாது. இந்தியா பல மாநிலங்கள் கொண்ட கூட்டாட்சி தத்துவத்தில் செயல்படுகிறது. தற்போது சமமான கல்வி வழங்க, தேசிய அள வில் கல்வி கொள்கை உருவாக்கப்படுகிறது.
அதன் பின், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டால் மட்டுமே, தேசிய அளவில் ஒரே பாடத்திட்டத்தை நோக்கி செல்லலாம்.
இந்தியாவில் வேளாண்மை வளர வேண்டுமா; தொழிற்துறை வளர வேண்டுமா?
இரண்டும் வளர வேண்டும். வேளாண்மை வளர்ந் தால் தான், தொழிற்துறையும் வளரும்; தொழிற் துறை வளர்ந்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும், பொருளாதாரம் உயரும். விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என்ற முறையில், விவசாயத்திற்கே என் முன்னுரிமை.
நடிகர், அரசியல்வாதி, ஆசிரியர் என, ஒவ்வொரு வரும் தங்கள் பிள்ளைகளை, தங்களை போல் வர விரும்புகின்றனர். ஆனால், ஒரு விவசாயி தன் பிள்ளையை, விவசாயியாக்க விரும்புவதில்லை. இந்த நிலைமாறும் வகையில், வேளாண் துறை வளர வேண்டும்.
உரிமை
சமூக வலைதளங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவு செய்வது, அனைவருக்கும் சுதந்திரமான உரிமை. ஆனால், எந்தவித பிழை திருத்தம் இன்றி, எப்படி வேண்டு மானாலும் கருத்துகள் பதிவிடப்படுகின்றன. செய்தி தாள்களில் தவறுகள் வந்தால், அதை திருத்தி கொள்ளலாம். அதற்கென, ஆசிரியர் குழு இயங்கு கிறது; ஆனால், சமூக வலைதளத்திற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அதற்கு, ஒழுங்குமுறை தேவை.
மாணவி கேட்டார்
'இந்தியாவில் ஜாதியை ஒழிப்போம்' என, மத்திய அரசே உறுதி ஏற்க சொல்கிறது. அப்படியென்றால், ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவது ஏன்?
குறிப்பிட்ட ஜாதியினர், நம் நாட்டில் கோவிலுக்குள் செல்ல முடியாமலும், கல்வி அறிவு கிடைக்காமலும், சம உரிமை இன்றியும், அடக்கி, ஒடுக்கப்பட்டனர். அவர்களையும் சமமாக கொண்டு வர, இட ஒதுக்கீடு முறை அமலுக்கு வந்தது. 'யாரோ செய்த தவறுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். இட ஒதுக்கீட்டில் நான் பாதிக்கப்படுகிறேன்' என, ஒரு மாணவி என்னிடம் கேட்டார்.
'எப்படி உன் மூதாதையரின் சொத்து உனக்கு கிடைக்கிறது' என, கேட்டேன். 'அது பாரம்பரியமாக வாரிசுகளுக்கு வழங்கப்படுகிறது' என்றார். அப்படி தான், ஜாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு, பாரம்பரியமாக இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அனைவரும் சமம் என்ற நிலை வரும் போது, இதை பற்றி யோசிக்கலாம்.இவ்வாறு, வெங்கையா நாயுடு பதில் அளித்தார்.
நாம் பகைவர்களோ, எதிரிகளோ அல்ல!
''நாம் யாரும் எதிரிகள் அல்ல; பகைவர்கள் அல்ல. ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்,''என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின், ௭௦ம் ஆண்டு நிறைவை ஒட்டி, மத்திய அரசு சார்பில், 'புதிய இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்போம்'
என்ற கண்காட்சி, நாடு முழுவதும் நடத்தப் படுகிறது. இதன் துவக்க விழா, சென்னை அண்ணா பல்கலையில், நேற்று நடந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கண்காட்சியை துவக்கி வைத்து பேசியதாவது:
சில மாநிலங்களில், சில தினங்களாக வன்முறை நடந்து வருகிறது. ஜாதி, மதம், மொழியின் பெயரால், வன்முறை கூடாது. அதற்கான நேரம் வந்துள்ளது; ௨௦௨௨ல், புதிய இந்தியாவை உருவாக்குவோம். ஒருமைப் பாட்டை, ஒற்றுமையை வலுப்படுத்துவோம். தமிழகத்தில் இருந்து ராஜாஜி துவங்கி, எண்ணற்ற தலைவர்கள் வந்துள்ளனர். தமிழ கம் பண்பட்ட பூமி, தமிழர்களின் மூளையும் பண்பட்டது. இங்கே உள்ள அரசியல்வாதி களுக்கு ஒன்றை சொல்லி கொள்கிறேன். தேர்தல் வந்தால் வேறு, வேறு கட்சி. தேர்தல் முடிந்தால், அனைவரும் மக்கள் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளோம் என, நினைக்க வேண்டும்.
நாம் யாரும் எதிரிகள் அல்ல; பகைவர்கள் அல்ல. ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். மக்கள் பணிக்காக பாடுபட வேண்டும். பார்லி மென்டும் சட்டசபையையும் ஆரோக்கியமாக செயல்பட விடுங்கள். விவாதங்கள் முடிவு எடுப்பதற்காக இருக்க வேண்டும்; முடிவுகளை குலைப்பதாக இருக் கக்கூடாது. எனவே, அரசியல்வாதிகள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகளிடம் இருந்து மாற்றங்கள் துவங்க வேண்டும். அவர்கள் முதலில் மாறினால், இளம் தலைமுறையும், மற்றவர்களும் தானாக மாறுவர்.இவ்வாறு அவர் பேசினார்.
'அம்மாவை மிஸ் பண்றேன்'
* தென் மாநிலத்தை, வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதியான பின், நேற்று முதல் முறையாக சென்னை வந்தார். அவரை கவர்னர் மற்றும் தமிழக அமைச்சர்கள் வரவேற்றனர்
* தெலுங்கை தாய்மொழியாக கொண்ட, வெங்கையா நாயுடு, மேடையில் பேசும் போது, முக்கிய விருந்தினர்களை தமிழில் வரவேற்றார். 'அதற்கு மேல் தெளிவாக தமிழ் பேச வராது' எனக்கூறி, ஆங்கிலத்தில் பேசினார்
* வெங்கையா நாயுடு பேசி முடித்த போது, ''துணை ஜனாதிபதியாக பதவியேற்று, சென்னைக்கு வந்து முதல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். இந்த நேரத்தில், தமிழத்தின் சக்திமிக்க அரசியல் தலைவர், அம்மாவை, 'மிஸ்' பண்ணுகிறேன். உண்மையில் நான், அவரை தவற விட்டுள்ளேன்,'' எனக்கூறி, லேசாக கண் கலங்கினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive