மத்திய அரசை விட இடைநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் ஊதியம் பெற்று வழங்கும் AEEO கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்

மத்திய அரசை விட இடைநிலை ஆசிரியர்களுக்கு  கூடுதல் ஊதியம் பெற்று  வழங்கும் AEEO கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி அளிக்கிறதா ? நண்பர்களே ...

உண்மைதான் ..


🔰மத்திய அரசிற்கு இணையான ஊதியம் தமிழக கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வேண்டும் என்ற கோரிக்காக பல ஆண்டுகளாக நாம் போராடிவருகிறோம் ...


🔰உண்மையில் தமிழக இடைநிலை ஆசிரியர்கள் மத்திய அரசு வழங்குவதைவிட அதிக ஊதியம் வழங்கி வருவது எத்தனை பேருக்கு தெரியும் ?


🔰குழம்ப வேண்டாம் பொறுமையாக படிக்க ..மத்திய அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200.  தமிழக மாநில இடைநிலை ஆசிரியர் ஊதியம் 5200+2800+750(1.1.2011க்கு பிறகு ), 5200+2800(1.1.2011க்கு முன்பு ...


🔰இப்போது மூன்று வித ஊதியங்களில் இருந்து பதவி உயர்வு பெறுவதால் பெறும் ஊதிய நிர்ணயங்களை இங்கே காண்போம் ..

🔥அடிப்படை ஊதியம் மூன்று கணக்கீட்டிற்கும் 10000என்று வைத்துக் கொள்வோம் ..

31.12.2010 ல் பட்டதாரி பதவி உயர்வு நிர்ணயம் .


அ. ஊதியம்  10000

தர ஊதியம்.   2800
--------------------------------
மொத்தம்.      12800
--------------------------------

பதவி உயர்வு

 பணப்பலன் 3%

12800*3%= 384@390

பட்டதாரி பதவி உயர்வு

 நிர்ணயம் 


அ. ஊதியம்  10000

3%                        390

தர ஊதியம்.   4600
--------------------------------
மொத்தம்.      14990
--------------------------------🔰  1.1.2011 ல் பட்டதாரி பதவி உயர்வு நிர்ணயம் .


அ. ஊதியம்  10000

தர ஊதியம்.   2800

தனி ஊதியம்.  750
--------------------------------
மொத்தம்.      13550
--------------------------------

பதவி உயர்வு

 பணப்பலன் 3%

13550*3%= 406.50@410

பட்டதாரி பதவி உயர்வு

 நிர்ணயம் 


அ. ஊதியம்  10000

3%                        410

தனி ஊதியம்.  750

தர ஊதியம்.   4600
--------------------------------
மொத்தம்.      15760
--------------------------------

குறிப்பு :
-------------
பதவி உயர்வில் தனி ஊதியம் அடிப்படை ஊதியத்தோடு சேர்க்கப்பட்டுள்ளது .

இதுவே மத்திய அரசைவிட கூடுதல் ஊதியம் பெற வழிவகை செய்கிறது ..


🔰 1.1.2011ல் மத்திய அரசிற்கு இணையாக ஊதியம் வழங்கப்பட்டால்

 9300+4200

பட்டதாரி பதவி உயர்வு நிர்ணயம் .

அ. ஊதியம்  10000

தர ஊதியம்.   4600

--------------------------------
மொத்தம்.      14600
--------------------------------

பதவி உயர்வு

 பணப்பலன் 3%

14600*3%= 426@430

பட்டதாரி பதவி உயர்வு

 நிர்ணயம் 


அ. ஊதியம்  10000

3%                        410

தர ஊதியம்.   4600
--------------------------------
மொத்தம்.      15010
--------------------------------

முடிவு :
----------

🔥மத்திய இணை ஊதியம் பெற்று பதவி உயர்வில் சென்றால் பெறும் ஊதியம் 15010

🔥தற்போதைய நிலையில் பதவி உயர்வில் பெறும் ஊதியம் 15760


மத்திய அரசைவிட அதிகமாக வழங்கும் ஊதியம் ..

      15760
      15010
------------------
          750
------------------

🔰தமிழக கல்வித்துறையில் 1.1.2011க்கு பிறகு

 5200+2800+750பெற்று பதவி உயர்வில் செல்பவர்களுக்கு AEEOக்களும், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும்  மத்திய அரசு தரும் ஊதியத்தைவிட அதிக ஊதியத்தை வழங்கி பெரும் உதவி செய்து வருகிறார்கள் ..🔥மேலும் ஏழாவது ஊதியக்குழுவிலும் அரசின் பணத்தை தொடர்ந்து  வாரி வழங்கும் கர்ண பிரபுக்களை பாராட்டியே ஆக வேண்டும் ..

🔰இத்தகை நிர்ணயங்களை தணிக்கை அலுவலர்களும் கவனிப்பை எதிர்நோக்கி கண்டும் காணாமல் போவதும் கல்வித்துறையில் பெறும் குழப்பங்களை முரண்பாடுகளையும் உருவாக்கி வருகிறது ..


🔥கர்ண பிரபுக்கள் கைங்கர்யம் மற்றும் தணிக்கை அலுவலர்களின் காட்டில் மழை பெய்யும் வரை அரசு பணம் வீணாகும் ...

🔥தொடரட்டும் மத்திய அரசை விட கூடுதல் மாநில பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் ...

ஆக்கம் 
------------

சுரேஷ் மணி 

நாமக்கல் 

9943790308

Share this

5 Responses to "மத்திய அரசை விட இடைநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் ஊதியம் பெற்று வழங்கும் AEEO கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்"

 1. என்ன சொல்ல வருகிறீர்கள்

  ReplyDelete
 2. தனக்கு . 750 கிடைக்கவில்லை என்ற குமுறல்.

  ReplyDelete
 3. 750pp merge with basic pay. It is fundamental rule

  ReplyDelete
 4. இடைநிலை ஆசிரியர்களுக்கு9300-4200 கொடுத்தால் அனைத்து பிரச்சனைகளும் தீரும்

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...