NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

காற்று மாசுபாடு அறிய புதிய ஆப்!!!

டெல்லியில் காற்று மாசுபாடு எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள ஏராளமான ஆப்ஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


டெல்லியில் கடந்த சில நாட்களாகவே காற்று மாசுபாடு நிலவி வருகிறது. இந்த நச்சுக்காற்றால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர். பகலிலும் மேகமூட்டம் போல காணப்படுகிறது. அருகில் இருக்கும் பொருட்களையோ, நபர்களையோ கூட மக்களால் பார்க்க முடியவில்லை. இதனால் சாலைகளில் தொடர் விபத்துகள் அரங்கேறி வருகின்றன. மாசு காரணமாக ரயில், விமான சேவைகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இருந்தும் எந்தவித பயனும் இல்லை.

அதில் ஒரு விதமாக மாசுகட்டுப்பாட்டை அறிந்துகொள்ள மொபைல் ஆப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

1 – ஏர்விடா (Airveda): உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் காற்றின் மாசுபாட்டு அளவையும் கண்டறியலாம். நகரின் பெயரை மட்டும் குறிப்பிட்டால், மாசு அளவு, வெப்பநிலை, ஈரப்பதம் உள்ளிட்ட விஷயங்களை இந்த மொபைல் ஆப் அளிக்கின்றன.

2 - சேபர் ஏர் (Safar Air): இந்தியாவிற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மொபைல் ஆப் இது. நமது நகரங்களின் வெப்பநிலை, வானிலை அறிவிப்புகளை அடுத்த 3 நாட்களுக்குத் தெரிந்து கொள்ளலாம். இது புனேவில் உள்ள இந்திய அரசின் புவி அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்டது.

3 – சம்மர்(Sameer): ஒவ்வொரு மணி நேர அப்டேட் குறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் அறிந்து கொள்ளலாம். காற்று தர எண் உள்ளிட்டவற்றை எளிதில் காணலாம். ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டால், செயலி தானாகவே எடுத்துக் கொண்டு சம்பவ இடத்தைக் கண்டுபிடிக்கும்.

4- ப்ளூமே ஏர் ரிப்போர்ட்(Plume Air Report): நகர மாசுபடுத்தலின் அளவை விரைவாக விவரிப்பது மற்றும் மிதமான, தீவிர அளவையும் சரியாக தருகிறது. உலகின் நகர்ப்புற பகுதிகளில் உள்ள காற்றுத் தரத்தை அறியச் செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி, புள்ளிவிவரங்களை வழங்குகிறது.

5 - ஏர் குவாலிட்டி(Air Quality / Air Visual): உலகெங்கிலும் உள்ள 9,500 க்கும் மேற்பட்ட நகரங்களின் முன்னறிவிப்பு காற்று மாசுபாடு மற்றும் வானிலை தரவுகளை வழங்குகிறது. விரிவான மாதாந்திர வரலாறு, இடங்கள், சென்சார்கள் அமைந்துள்ள வரைபடங்கள், மற்றும் AQI மதிப்பு, வானிலை தகவல் உள்ளிட்டவற்றை அளிக்கிறது.

6 – ஏர் லென்ஸ் டேட்டா( Air lens Data): மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம் காற்று தர அளவை அறிய ஏர் லென்ஸ் டேட்டா செயலியை பயன்படுத்தலாம்.

இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகமுள்ள நகரங்களில் உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி முதலிடத்தில் உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive