பணி நியமனம் உரிமை கோர முடியாது: உயர் நீதிமன்றம்!

நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டதற்காகப் பணி நியமனம் வழங்க வேண்டும் என உரிமை கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ராஜேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன்.2013ஆம் ஆண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது.நேர்முகத் தேர்வில் பங்கேற்றும் பணி நியமன உத்தரவு எதுவும் வரவில்லை. அதனால், பணி நியமனம் வழங்கக் கோரி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று (நவம்பர் 25) விசாரணைக்கு வந்தது. நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டதற்காகப் பணி நியமனம் வழங்க வேண்டும் என உரிமை கோர முடியாது என கூறி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Share this