NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பார் கவுன்சில் தேர்தல்: உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

நாடு முழுவதுமுள்ள வழக்கறிஞர்களின் பட்டப்படிப்பு பற்றியும் அவர்களது தகுதி பற்றியும் அதன்மூலம் பார் கவுன்சில் எனப்படும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினராவது பற்றியும் தொடர்ந்து சர்ச்சைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பார் கவுன்சில் தேர்தல்கள் இதனால் தள்ளிப்போகின்றன. இந்த நிலையில் இந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உச்ச நீதிமன்றம், நவம்பர் 24ஆம் தேதி வழக்கறிஞர்களின் தகுதிகளை நிர்ணயம் செய்ய புதிய நெறி முறைகளை வகுத்து உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.

அஜய் இந்தர் சங்வான் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் டெல்லி பார் கவுன்சிலுக்கு எதிராக தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், அபய் மனோகர் சப்ரே ஆகியோர் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இந்த வழக்குத் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மறு பரிசீலனை, தெளிவுபடுத்துதல், மறு வரையறைகள் உள்ளிட்டவற்றைக் கோரி ஏராளமான மனுக்கள் முறையிடப்பட்டன. இதையடுத்து, நவம்பர் 24ஆம் தேதி புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை வகுத்து அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.



“சட்ட பல்கலைக்கழகங்கள் வழக்கறிஞர்களின் சட்ட பட்டப்படிப்பு சான்றிதழ் பற்றிய சரிபார்த்தலுக்காக அதிக காலம் எடுத்துக் கொள்கின்றன. இதன் காரணமாக, பார் கவுன்சில் தேர்தலில் வழக்கறிஞர்கள் பங்கு பெறுவது பாதிக்கப்படக் கூடாது என்று பல்வேறு மாநில பார் கவுன்சில்கள் கோரியுள்ளன

மேலும், அகில இந்திய பார் கவுன்சில் கடந்த 12ஆம் தேதி நடந்த மத்திய சரிபார்ப்பு கமிட்டி கூட்டத்தின் அறிக்கையை 15ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில் இருந்து மொத்தமுள்ள 15,34,531 பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்களில் வெறும் 6,44,768 வழக்கறிஞர்களே தங்கள் சரிபார்ப்பு விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.

மாநில பார் கவுன்சில்கள் சார்பாக இதுவரை 5,23,706 எல்.எல்.பி. பட்டப்படிப்பு சான்றிதழ்கள் பல்கலைக்கழங்கங்களுக்குச் சரி பார்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் வெறும் 1,65,339 சான்றிதழ்கள் மட்டுமே சரி பார்த்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

மேற்கண்ட விவரங்களை வைத்து பார்க்கையில் தங்களது பட்டப்படிப்பு சான்றிதழோடு சரி பார்ப்பு விண்ணப்பங்களை அளித்துள்ள 6,44,768 வழக்கறிஞர்களும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற தகுதியானவர்கள்.

அதேநேரம் மேற்கண்ட வழக்கறிஞர்களின் பட்டப்படிப்பு சான்றிதழ்களில் பல்கலைக்கழகங்கள் குறைகளைக் கண்டுபிடிக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

வாக்காளர் பட்டியல் வரும் 30ஆம் தேதிக்குள் வெளியிடப்பட வேண்டும். 75 நாள்களுக்குள் தேர்தல் நடைமுறை முடிக்கப்பட வேண்டும். வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின், வேட்புமனு தாக்கல் செய்ய 15 நாள்கள் ஒதுக்க வேண்டும். வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கு ஒரு வார கால அவகாசம் அளித்திட வேண்டும், அதையடுத்து ஒரு வாரத்துக்குள் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும். பின் தேர்தல் தேதியை அறிவித்திட வேண்டும்.

மாநில பார் கவுன்சில்கள் தேர்தல் தொடர்பான அனைத்து செயல் திட்டங்களையும் வரும் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அனைத்து சட்ட பல்கலைக்கழங்களும் தங்களது சான்றிதழ் சரிபார்ப்பு பணியை மார்ச் 31க்குள் முடிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், “வழக்கறிஞர் சங்கத் தேர்தலின் முடிவுகள் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டே அமையும்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த வழக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



குறிப்பாக தமிழகத்தில் ஒரு லட்சம் பேர் வரை வழக்கறிஞர்களாகப் பதிவு பெற்றிருந்தாலும், சுமார் 55 ஆயிரம் வழக்கறிஞர்கள்தான் தங்கள் தகுதிச் சான்றிதழ்களை தகுதி சரி பார்ப்புக்காக அனுப்பியிருக்கிறார்கள். எனவே 55 ஆயிரம் பேர்தான் முதல்கட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவார்கள். அதிலும் குறிப்பாக சுமார் நாலாயிரம் பேர் வரை வழக்கறிஞர்களுக்கான தகுதித் தேர்வு எழுதாதவர்கள் என்பதால் அவர்கள் போக மீதி சுமார் 50 ஆயிரம் வழக்கறிஞர்கள்தான் தமிழகத்தில் பார் கவுன்சில் தேர்தலுக்கு வாக்காளர்களாகும் தகுதி வரம்புக்குள் வருகிறார்கள்.

தொடர் குழப்பங்கள் நிலவிவந்த பார் கவுன்சில் தேர்தல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இந்தப் புதிய உத்தரவு ஒரு தற்காலிக தீர்வாக அமைந்திருக்கிறது என்கிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள்.

- ஆரா, கவிப்பிரியா




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive