தேசிய வரைவு கல்விக்கொள்கையில்
இடம்பெற்றுள்ள மொழிக்கல்வி குறித்த பத்தி: (மொழியாக்கம்: பூ.கொ. சரவணன் )
P.4.5.9 மொழியைத் தேர்வு செய்வதில் நெகிழ்வுத்தன்மை:
நெகிழ்வுத்தன்மையைக் கருத்தில்கொண்டு ஆறாம் வகுப்புப் படிக்கையில் மாணவர்கள் தாங்கள் கற்கும் மூன்று மொழிகளில் ஒன்றை மாற்றிக்கொள்ளலாம். இவ்வாறு மொழியை மாற்றிக் கற்றுக்கொள்ள விரும்பும் இந்தி பேசும் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் இந்தி, ஆங்கிலத்தோடு இந்தியாவின் பிற பகுதியில் வழங்கிவரும் நவீன இந்திய மொழியொன்றை கற்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளூர் மொழி, இந்தி, ஆங்கிலத்தைப் பயில வேண்டும். நடுநிலைப்பள்ளியில் வேறு மொழியைத் தேர்வு செய்யும் மாணவர்கள் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு மூன்று மொழிகளிலும் ( ஒரு மொழியை இலக்கிய அளவில்) தங்களுக்கு இருக்கும் திறமையை எதிர்பார்க்கிற அளவுக்கு வாரியத்தேர்வில் நிரூபிக்க வேண்டும். (காண்க P.4.9.5) இந்தத் தேர்வு வாரியத் தேர்வுகள் ஒரு மாணவரின் அடிப்படை மொழியறிவையே சோதனை செய்வதாலும், ஒரு மொழியில் அடிப்படை அறிவைப் பெற நான்காண்டுகள் போதும். ஆகவே, ஆறாம் வகுப்பில் வேறு மொழியைத் தேர்வு செய்து கற்பதை மாணவர் விரும்புவதோடு, ஆசிரியரும், பள்ளிக்கல்வி முறையும் உதவினால் வேறு மொழியைக் கற்க முடியும். மும்மொழிக் கொள்கைக்கு உட்பட்டு நடுநிலைப்பள்ளியில் விரும்பிய கூடுதல் மொழிகளைக் கற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments