NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.06.23

 




திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :201

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.

விளக்கம்:

தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.

பழமொழி :

A guilty conscience needs no Accuser

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1 .அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.


2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்

பொன்மொழி :

உண்மையில் எந்தவொரு மனிதனுக்கும் இருக்கும் ஒரே மூலதனம் நேரம் தான், மேலும் அவன் இழந்தால் பெற முடியாத ஒரே விடயம் நேரம். --தாமஸ் அல்வா எடிசன்

பொது அறிவு :

கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?


விடை: சார்லஸ் பாபேஜ்

சதுரங்கம் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது?


விடை: இந்தியா

English words & meanings :

 Disease –sickness. நோய். Entrance –a passage or gate to go inside a place. வாசல்

ஆரோக்ய வாழ்வு :

யோகா வாரம் : யோகா செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை ஆகும். வெறும் வயிற்றில் பயிற்சி செய்வதினால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் அரைமணி நேரம் பயிற்சி அந்நாள் முழுவதற்கும் போதுமானது. முறையான பயிற்சி அவசியம்.

ஜூன் 26




நீதிக்கதை

பாலைவனத்தில்_பயணம் செய்து கொண்டிருந்தான் ஒருவன் குடிக்க கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது.

அவன் போக வேண்டிய தூரமோ அதிகம்.

குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.

மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் அடி பம்பும் அருகே ஒரு ஜக்கில், தண்ணீரும் இருந்தன.

ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும்.

குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில்
 தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்.

அந்தப் பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்தத் தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா? தண்ணீர் வருமா?
என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது.

அது இயங்கா விட்டால், அந்தத் கொஞ்சத் தண்ணீரும் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால்
தாகமும் தணியும் உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான்
தண்ணீரைக் குடித்து விடுவதே
புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது.

ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து

அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் நான் குடித்து விட்டால்
அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது.

இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு எந்த பயனும் இல்லாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.....!!

அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை
ஆனது ஆகட்டும் என்று......

அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான்.

தண்ணீர் வர ஆரம்பித்தது....!!தாகம் தீர வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு தான் பயணத்திற்காக கொண்டு வந்த குடுவையில் சேகரித்து கொண்டான்.

அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்த்து.

நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை பிறருக்கும்
அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும்.

எந்த ஒரு நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது.

அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.

" யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால்

இந்த உலகம் என்றும் இன்பமயமாகி விடும்"....!!!

இன்றைய செய்திகள்

26.06. 2023

*26 ஆண்டுகளுக்குப் பிறகு எகிப்து சென்ற முதல் இந்திய பிரதமர் மூவர்ணக் கொடியுடன் உற்சாக வரவேற்பு.

*பறவைகளின் பாதுகாப்பை வலுப்படுத்த அரசின் சார்பில் தமிழ்நாடு மாநில பறவை ஆணையம் அமைப்பு.

*எல்நினோ காலநிலை நிகழ்வு காரணமாக மீண்டும் உயிர்க்கொல்லி வைரஸ்கள் உருவாகும் அபாயம். கடுமையான வெப்பம் காரணமாக வெப்ப மண்டல நோய்கள் உருவாகும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.  

*செவ்வாய் கிரகத்தில் மாறிவரும் பருவநிலையை படம் பிடித்தது நாசா. சூரியனுக்கு அருகே செங்கோள் சென்ற போது எடுக்கப்பட்ட புற ஊதாக்கதிர் படம் வெளியானது. 

*தமிழ்நாட்டில் 6 இடங்களில் 100 டிகிரியை கடந்து வெப்பம் பதிவு அதிகபட்சமாக மதுரை புறநகர் பகுதியில் 104.4 டிகிரி பதிவானது. 

*TNPL : திண்டுக்கல் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கோவை.


Today's Headlines

*The first Indian Prime Minister to visit Egypt after 26 years and he was welcomed with the tricolor flag.

 * On behalf of the Tamil Nadu government to strengthen the protection of birds A State Bird Commission has been set up.

 *Risk of resurgence of life-killing viruses due to El Niño climate event.  The World Health Organization has warned that tropical diseases will develop due to extreme heat.

 *NASA captured the changing climate on Mars.  An ultraviolet image was released when the constellation passed close to the Sun.

 * 6 places in Tamilnadu crossed 100 degrees and the highest recorded temperature was 104.4 degrees in Madurai suburbs.

 *TNPL: 
Coimbatore beat Dindigul by 59 runs.
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive