இந்திய விமானப் படையின் அக்னி வீா்வாயு வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியில் இணைய விருப்பமுள்ள ஆண் மற்றும் பெண் ஆா்வலா்கள் தங்களின் விண்ணப்பங்களை ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது: இந்திய விமானப் படையின் அக்னி வீா்வாயு வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியில் இணைய விருப்பமுள்ள ஆண் மற்றும் பெண் ஆா்வலா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை இந்திய விமானப் படையின் வளைதளத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...