ஆதார் மையம்:
இந்திய குடிமகனின் முக்கிய அடையாளமாக விளங்கி வரும் ஆதார் கார்டினை குறைந்தது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது அப்டேட் செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆதார் கார்டினை ஆன்லைன் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தின் மூலமாகவோ அப்டேட் செய்து கொள்ள முடியும். தற்போது, ஆதார் கார்டினை அப்டேட் செய்வதற்கு அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தினை தெரிந்து கொள்வது அவசியம். உங்களது மொபைல் மூலமாகவே ஆதார் மையத்தை அறியலாம்.
முதலில் https://appointments.uidai.gov.in/easearch.aspx என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று நகரம், மாவட்டம் ஆகியவற்றை பதிவு செய்யவும்.
இதன் பின்னர் ‘நிரந்தர மையங்களை மட்டும் காட்டு’ என்னும் பகுதியை கிளிக் செய்து அதில் காட்டப்பட்டுள்ள கேப்சாவினை நிரப்பவும்.
இதனையடுத்து, ‘ஒரு மையத்தை கண்டறி’ என்னும் பகுதியை கிளிக் செய்யவும். இதன் பின்னர், புதிய பக்கம் திறக்கப்பட்டு உங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள அனைத்து ஆதார் மையங்கள் குறித்தான விவரப்பட்டியல் காண்பிக்கப்படும்.
அந்த விவரங்களின் அடிப்படையில் ஆதார் மையத்திற்கு நேரடியாக சென்று ஆதார் அட்டையை அப்டேட் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...