தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, எமிஸ் என்ற, கல்வி மேலாண்மை தளத்தின் ஒருங்கிணைந்த அடையாள எண் வழங்கப்படுகிறது.
அந்த எண்ணின் இணைப்பில், சம்பந்தப்பட்ட மாணவரை பற்றிய தரவுகள், ஆன்லைனில் சேமிக்கப்படுகின்றன.
இந்த எண், மாணவர்களின் அனைத்து வகை சான்றிதழ்கள், அலுவலக பதிவேடுகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு மாணவர், ஒரு பள்ளியில் இருந்து இன்னொரு பள்ளிக்கு மாறி சேர்க்கை பெறவும், பொதுத் தேர்வு எழுதவும், இந்த எமிஸ் எண் கட்டாயம்.
இந்த எண்ணானது, இதுவரை, 16 இலக்கமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு, 10 இலக்க அடையாள எண்ணாக வழங்கப்பட்டுள்ளது.
நிர்வாக ரீதியாக எளிதாக இருக்கும் வகையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, பள்ளிக்கல்வி அதிகாரி கள் தெரிவித்தனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...