Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கூடுவாக - கூப்டுவாக - பேசுவாக Repeaட்டே!

IMG-20230801-WA0024

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு(டிட்டோ-ஜேக்)உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் இன்று பள்ளிக்கல்வி இயக்குனர் திரு அறிவொளி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் திரு கண்ணப்பன் ஆகியோரின் அழைப்பை ஏற்று சென்னை,நுங்கம்பாக்கம்,கல்லூரி சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு வி.எஸ்.முத்துராமசாமி அவர்கள் தலைமையில்  பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.


இக்கூட்டத்தில் டிட்டோ-ஜேக்கில் உள்ள 11 சங்க பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.


பேச்சுவார்த்தையில்  பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் கொடுக்கப்பட்டுள்ள 27 கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை இயக்குனர் அலுவலக அளவிலேயே மிக விரைவில் முடிப்பதாகவும் அரசின் கொள்கை முடிவோடு அறிவிக்கவேண்டியவற்றை பள்ளிக்கல்வி அமைச்சர் கவனத்திற்கு கொண்டுசென்று விரைவில் முடித்துக்கொடுப்பதாக கூறினார்.


இயக்குனர் சந்திப்பிற்குப் பின் மீண்டும் டிட்டோ-ஜேக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூடி ஒரு வாரத்திற்குள் கல்வித்துறை செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் ஆகியோரை சந்தித்த பின்  அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.


முன்னதாக,


06.06.2023 :

TETOJAC  கூடி TET வழக்கு உள்ளிட்ட 27 கோரிக்கைகளுக்காகப் போராடப்போவதாகக் கூறியது.


06.06.2023 :

அன்று மாலையே இயக்குநர்களிடம் கடிதம் அளிக்கப்பட்டது.


07.06.2023 :

அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.


09.06.2023 :

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறி போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.


20.07.2023 :

இன்று கூடிய  TETOJAC, 184 ஆசிரியர்களைக் கொண்டு வழக்கு போட்டுவிட்டதாகக் கூறியது. மேலும், 26 & 27 தேதிகளில் அமைச்சரையும் அதிகாரிகளையும் மீண்டும் சந்திப்பதாகக் கூறியது.


27.07.2023 :

ஆகஸ்ட் 1-ல் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது.


01.08.2023 :

பேச்சுவார்த்தையில் 27 கோரிக்கைகளில் பலவற்றை இயக்குநர் மட்டத்திலேயே செய்து தருவதாக ப.க. இயக்குநரிடம் உறுதி பெறப்பட்டுள்ளது. உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூடி ஒரு வாரத்திற்குள் கல்வித்துறை செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் ஆகியோரை சந்தித்த பின்  அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.


So


கூடுவாக -  கூப்டுவாக - பேசுவாக Repeaட்டே!


இந்த Time Loop-க்கு முடிவே இல்லையா. . . .?!





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive