செய்தி வெளியீடு எண் : 1669
நாள்: 16.08.2023
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24 - ஆம் ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கை முடிவுற்ற நிலையில் , மேலும் சில அரசு கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு , நேரடி மாணாக்கர் சேர்க்கை ( Spot Admission ) சார்ந்த கல்லூரிகளில் 21.08.2023 முதல் நடைபெற உள்ளது. மாணாக்கர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் . நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் " TNGASA2023 - UG VACANCY " - என்ற தொகுப்பில் காணலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...