எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்படும் நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை இழந்துள்ளது
🔥தற்போதுள்ள சூழலில் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் நிரந்தர ஆசிரியர் ஒருவர் தற்காலிக ஆசிரியர் ஒருவர்.
🔥வேலை நாட்களில் பயிற்சி என்றால் ஒரு ஆசிரியர் பயிற்சிக்கு சென்றால் ஓர் ஆசிரியர் மட்டும் பள்ளியில்....
🔥நிர்வாக ரீதியாக மாற்றுப்பணி நியமிப்பதில் மிகுந்த சிரமம்.
🔥மாற்றுப் பணி நாட்களில் பள்ளி நிர்வாகமும் இயல்பான நிலையில் இருக்காது என்பது நடைமுறை.
🔥 ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறையாக உள்ள நிலையில் இது போன்ற அனைத்து பயிற்சிகளுக்கும்....
ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும்
மாநில அளவிலான பயிற்சி,
மாவட்ட அளவிலான பயிற்சி,
வட்டார அளவிலான பயிற்சி அனைத்திற்கும் ஆசிரியர்களையே கருத்தாளர்களாக பயன்படுத்தும் நிலை....
🔥மாறுதல், பதவி உயர்வு நடைமுறையும் பழைய ஓய்வூதிய திட்டமும் குளறுபடியிலும் குழப்பத்திலும் உள்ளதால்....
🔥ஆசிரியர்களின் மனநிலை உற்சாகமின்றி உள்ள நிலை.
🔥ஏற்கனவே, அரசு பள்ளி என்றாலே எப்பொழுது பார்த்தாலும் பயிற்சிகள்... கூட்டங்கள்...
தவணை தவணையாக நோட்டுகள் எடுத்தல்,புத்தகம் எடுத்தல், பயிற்சி புத்தகங்கள் எடுத்தல்.. சீருடை எடுத்தல்..என ஒரு ஆசிரியருக்கு இதுபோன்ற பணி என்பதால்...... பள்ளியில் எப்பொழுதும் ஒரே ஆசிரியர்தான் இருப்பார்
இதை நம்பி எப்படி பிள்ளைகளை சேர்ப்பது என மக்கள் ஏளனமாக நினைக்கும் நிலை.
🔥 பள்ளி திறந்து ஒரு வாரம்தான் ஆகிறது.
🔥முதல் வகுப்பு மாணவர்களின் அழுகை குரல் இன்னும் அடங்கவில்லை.
🔥இப்படியான சூழலில் பயிற்சி....
கல்வி நலன் பாதிக்கும்.
கல்வி ஆண்டில் 10 நாட்கள் வேளை நாள் கூடுதலாக சனிக்கிழமைகளில் உள்ள நிலையில்....*
🔥 *அந்த 10 சனிக்கிழமைகளில் பள்ளிக்கு (மாணவர்களுக்கு) விடுமுறை அளித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி நாட்களாக அமைந்தால் சிறப்பாக இருக்கும்*.
*********************************
🔥 *தனியார் பள்ளிகளுக்கு இதுமாதிரியான மாணவர்களை பாதிக்கும் நிர்வாக சூழல் இல்லை.*
🔥 *தனியார் பள்ளிகளை பெற்றோர் நாடுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்பதை பணிவுடன் குறிப்பிட விரும்புகிறோம்*.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...