தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் (DOTE) வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுருக்கெழுத்து தமிழ் அதிவேகப் பிரிவில் (Shorthand Tamil high speed) சேர்ந்துள்ள மாணவர்களுக்கு ஆகஸ்ட் 10ம் தேதி தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுநாள் (ஆகஸ்ட் 11) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுருக்கெழுத்து ஆங்கில அதிவேகப் பிரிவு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும். ஜூனியர் மற்றும் சீனியர் கணக்கியல் தேர்வு முதல் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஜூனியர் மற்றும் சீனியர்களுக்கான சுருக்கெழுத்து தமிழ் தேர்வு ஆகஸ்ட் 24ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெறும். அதேபோல், ஜூனியர் மற்றும் சீனியர் கிரேடுகளுக்கான சுருக்கெழுத்து ஆங்கிலத் தேர்வு மறுநாள் ஆகஸ்ட் 25 நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூனியர் மற்றும் சீனியர் கிரேடுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தட்டச்சு எழுத பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் 31-ம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் அதிவேக தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலத் தேர்வுகள் செப்டம்பர் 1, 2024 அன்று நடைபெறும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...