எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி.யூ.சி., இரண்டாம் ஆண்டு தேர்வுக்கான இறுதி அட்டவணையை கர்நாடக பள்ளி தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு -மார்ச் 21 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரையும்; பி.யூ.சி., இரண்டாம் ஆண்டுத் தேர்வு, மார்ச் 1ம் தேதி முதல், மார்ச் 20ம் தேதி வரையும் நடக்கிறது. ஏற்கனவே, கடந்த டிசம்பரில் உத்தேச தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க, டிசம்பர் 16ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று, எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி., இரண்டாம் ஆண்டுத் தேர்வுக்கான இறுதி அட்டவணையை கர்நாடக பள்ளி தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கான அட்டவணை:
மார்ச் 21- முதல் மொழி; மார்ச் 24- கணிதம்; மார்ச் 26- இரண்டாம் மொழி; மார்ச் 29- சமூக அறிவியல்; ஏப்ரல் 2- அறிவியல் ஏப்ரல் 4- மூன்றாம் மொழி
பி.யூ.சி., இரண்டாம் ஆண்டு தேர்வுக்கான அட்டவணை:
மார்ச் 1 கன்னடம், அரபு; மார்ச் 3- கணிதம், கல்வியியல், லாஜிக், வணிக ஆய்வுகள்; மார்ச் 4- தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, உருது, சமஸ்கிருதம், பிரெஞ்ச்; மார்ச் 5- அரசியல் அறிவியல், எண் கணிதம்; மார்ச் 7- வரலாறு, இயற்பியல்; மார்ச் 10- விருப்ப கன்னடம், கணக்கியல், புவியியல், வீட்டு அறிவியல்; மார்ச் 12- உளவியல், வேதியியல், அடிப்படைக் கணிதம்; மார்ச் 13- பொருளாதாரம்; மார்ச் 15- ஆங்கிலம்; மார்ச் 17- புவியியல்; மார்ச் 18- உயிரியல், சமூகவியல், மின்னணுவியல், கணினி அறிவியல்; மார்ச் 19- இந்துஸ்தானி இசை, தகவல் தொழில்நுட்பம், சில்லறை விற்பனை, ஆட்டோமொபைல், உடல்நலம், அழகு மற்றும் ஆரோக்கியம்; மார்ச் 20- ஹிந்தி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...