Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொலைதூரக் கல்வி நிறுவன முதுநிலை பட்ட தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

           சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவன முதுநிலை பட்ட, பட்டயப் படிப்புகளுக்கான 2014 டிசம்பர் மாதத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (மார்ச் 11) வெளியிடப்பட உள்ளன.பல்கலைக்கழகத்தின் www.ideunom.ac.in, www.unom.ac.in ஆகிய இணையதளங்களில் இரவு 8 மணி முதல் தேர்வு முடிவுகளை பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
 

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி: சரத்குமார் யோசனை!

            அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் யோசனை தெரிவித்துள்ளார். 

 

எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்!!!

      எலுமிச்சை சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்!!!

புதிய மருத்துவ காப்பீடு அட்டை எளிதில் டவுன்லோடுசெய்துகொள்ளலாம்!

        www.TNNHIS2012.com என்ற வலைத்தளம் சென்று employee login என்பத கிளிக் செய்து உங்கள் பழைய அட்டை எண்னை user name மற்றும் உங்கள் பிறந்த தேதியை password ஆக உள்ளீடு செய்தால் உங்கள் புதிய மருத்துவ காப்பீடு அட்டை விபரம் காணலாம்.
 

மாணவர்கள் மொபைல் போன்களுக்கு அடிமையாவது அதிகரிப்பு.

        மதுரை மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மொபைல் போன்களுக்கு அடிமையாவது அதிகரித்துள்ளது.

கட்டாய கல்வி உரிமை சட்ட விழிப்புணர்வு: பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட உத்தரவு

         கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து, பெற்றோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அதிகாரிகள் நியமனம்

           பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குரூப் 2 தேர்வு முடிவு வெளியீடு: மார்ச் 26 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

             தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) குரூப் 2 (நேர்காணல் பணிக்கான இடங்கள்) பிரதான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் வரும் 26-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன.

வேலைவாய்ப்பு கோரி பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம்

          தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற பட்டதாரிகள் சென்னையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிளஸ் 2 தேர்வு முறைகேடு: 36 பேர் நேற்று சிக்கினர்

           சென்னை: பிளஸ் 2 ஆங்கிலம், முதல் தாள் தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்ட, 36 பேர் பிடிபட்டனர். இதில், பள்ளி மாணவர்கள், 12 பேர். அதேநேரம், ஆங்கிலம் முதல் தாள் ஆங்கில வழி மாணவர்களுக்கு எளிமையாகவும், தமிழ் வழி மாணவர்களுக்கு கொஞ்சம் கடினமாகவும் இருந்தது.

'குரூப் - 2' தேர்வு முடிவு வெளியீடு

               'குரூப் - 2' தேர்வு முடிவை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., நேற்றிரவு, வெளியிட்டது. டி.என்.பி.எஸ்.சி., சார்பில், கடந்த நவ., 8, 9 ஆகிய தேதிகளில், 'குரூப் - 2' பதவிக்கான, 'மெயின்' தேர்வு நடந்தது. துணை வணிக வரி அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி, தொழிலாளர் ஆய்வாளர், நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட, 1,130 பதவிகளுக்கு, மொத்தம், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இதில், 5,635 பேர் தேர்வு பெற்றுள்ளனர். 
 

தமிழகத்தில் ஆதார் எண்ணை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்

            வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை சேர்ப்பதற்காக, ஏப்ரல் மற்றும் மே மாதம், சிறப்பு முகாம் நடத்தப்படும் நாட்களில், ஆதார் எண் பெறாதவர்களுக்காக, 'ஆதார் மெகா முகாம்' நடத்தப்பட உள்ளது.

வருமான வரி: பள்ளிகளுக்கு கெடு

            வரும் 31ம் தேதிக்குள், வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், ஒரு நாளைக்கு, 20 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும்' என, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உச்சநீதிமன்ற டி.இ.டி.வழக்குகள் வரும் மார்ச் 30தேதிக்கு ஒத்திவைப்பு - புதிய தலைமுறை தொலைகாட்சி

*ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் மார்ச் 30 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


2500 ஆண்டு பழமையான மனித மூளை கண்டுபிடிப்பு

      2500 ஆண்டு பழமையான மனித மூளை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
 
         இங்கிலாந்தில் கடந்த 2008–ம் ஆண்டில் போர்க் பகுதியில் சேறும் சகதியும் நிறைந்த பகுதியில் தலை வெட்டப்பட்ட நிலையில் ஒரு மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டது. அதில் மூளை பத்திரமாக இருந்தது.

 

சூரிய ஒளியில் இயங்கும் விமானம் தனது உலக சுற்றுப்பயணத்தை இன்று காலை தொடங்கியது: நாளை இந்தியாவுக்கு வருகை



         சூரிய ஒளியில் இயங்கும் விமானம் உலகளவிலான தனது முதல் சுற்றுப்பயணத்தை அபுதாபியிலிருந்து இன்று அதிகாலை தொடங்கியது. அங்கிருந்து ஓமன் செல்லும் இவ்விமானம் நாளை இந்தியாவுக்கு வந்து சேர்கிறது.
 
 

சான்றிதழ்களை பாதுகாக்க 'டிஜிட்டல் லாக்கர்' அறிமுகம்

          பொதுமக்களின் முக்கிய சான்றிதழ்கள், 'டிஜிட்டல்' முறையில் இருந்தால், அதை பாதுகாப்பாக வைக்க, 'டிஜிலாக்கர்' என்ற இணைய வசதியை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. கல்விச் சான்றிதழ்கள், வங்கி டிபாசிட் சான்றிதழ்கள் போன்ற சான்றிதழ்களை, வீடுகளில் பாதுகாப்பாக, தாள்களாக பத்திரமாக வைத்திருப்போம். அது போல, அந்த சான்றிதழ்களை, டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக வைக்கும் புதிய முறை அறிமுகம் இப்போது செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு தொடக்கம்

         கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி, வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகின்றன.

தேர்வை எப்படி எழுத வேண்டும்?

              எல்லாப் பாடங்களுக்குரிய தேர்விலும், அதிக மதிப்பெண் வினாக்கள், சற்றே குறைந்த மதிப்பெண் வினாக்கள் மற்றும் குறைந்த மதிப்பெண் வினாக்கள் என்ற வகைப்பாடு இருக்கும்.

 

தேர்வு நடைமுறைகளை அடிக்கடி மாற்றுவதால் தேவையற்ற குழப்பங்கள்!

         பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வரும் நிலையில், நடைமுறைகளை அடிக்கடி மாற்றுவதால், பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துவதாக, தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தெரிவித்தனர். 
 

உள்கட்டமைப்பு மேலாண்மைக்கு ஆட்களின் தேவை அதிகம்!

           இந்தியாவில், உள்கட்டமைப்புத் துறை பெரிய வளர்ச்சி கண்டு வருகிறது. அடுத்து வரும் சில பத்தாண்டுகள் காலகட்டத்தில், உள்கட்டமைப்பு வளர்ச்சியை, திட்டமிட்டு வழிநடத்தும் நிபுணர்களின் தேவை பெரிதும் அதிகரிக்கும்.

"ஜாக்டோ' போட்டியாக "ஜாக்டா' நடவடிக்கை 2 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநில பேரணி

           தமிழகம் முழுவதும், "ஜாக்டோ' அமைப்பின் சார்பில், இரண்டு லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்கும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம், இன்று நடக்கும் நிலையில், மேற்கண்ட அமைப்புக்கு போட்டியாக, "ஜாக்டா' அமைப்பு தனித்து செயல்படுவதால், ஆசிரியர் சங்கங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.

சான்றிதழ்களை பாதுகாக்க 'டிஜிட்டல் லாக்கர்' அறிமுகம்

              பொதுமக்களின் முக்கிய சான்றிதழ்கள், 'டிஜிட்டல்' முறையில் இருந்தால், அதை பாதுகாப்பாக வைக்க, 'டிஜிலாக்கர்' என்ற இணைய வசதியை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. கல்விச் சான்றிதழ்கள், வங்கி டிபாசிட் சான்றிதழ்கள் போன்ற சான்றிதழ்களை, வீடுகளில் பாதுகாப்பாக, தாள்களாக பத்திரமாக வைத்திருப்போம்.
 

டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் குழப்பம் தீர்க்க தகவல் மையம்

       தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், பார்வை யாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், தேர்வர்களின் சந்தேகங்களைத் தீர்க்க, புதிய தகவல் மையம் அமைக்கப்பட உள்ளது. 

வேலைநிறுத்தம்: 40 ஆயிரம் பேர் பங்கேற்க ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் முடிவு

       காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 40 ஆயிரம் பேர் பங்கேற்பது என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கங்களின் போராட்டக் குழு முடிவு செய்துள்ளது.

ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கப்படும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை

         ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை தகவல்களை இணைக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பார்வையற்ற பட்டதாரிகளுக்கு உதவிப் பேராசிரியர் பணி வழங்கக் கோரிக்கை

      தகுதித் தேர்வு முடித்து நீண்ட காலமாகக் காத்திருக்கும் பார்வையற்ற 100 பட்டதாரிகளுக்கு உதவிப் பேராசிரியர் பணி வழங்க வேண்டும் என பார்வையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு : கோயிலில் கலை நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த கிராம மக்கள்

     புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் பிளஸ் 2 தேர்வும் முடியும் வரை கோயிலில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை என கிராம மக்கள் தீர்மானித்துள்ளனர்.
 

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூடியது பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை

                         
      தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive