Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TN TET - New Candidates can download your hall ticket from Here


I.  Fresh List of Candidates
    enter your Application No. (eg.???????) 
          (for all the Fresh candidates who have applied for Examination)

  Application No.      

அரசு பள்ளிகளில் அடுத்தாண்டு முதல் எஸ்.எம்.எஸ். வருகைப் பதிவேடு முறை


          தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும், அடுத்த கல்வியாண்டு முதல் ஆசிரியர்களின் வருகையை, எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்து, அதிகாரிகளுக்கு அனுப்பும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.

 

ஆசிரியர் தகுதித் தேர்விற்கு, புதிதாக விண்ணப்பம் செய்த தேர்வர்களுக்கு, இன்று முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது.

         ஆசிரியர் தகுதித் தேர்விற்கு, புதிதாக விண்ணப்பம் செய்த தேர்வர்களுக்கு, இன்று முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. டி.ஆர்.பி., இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

        ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பு, மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. ஜூலை, 12ம் தேதி நடந்த தேர்வில், 6 .76 லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதினர்; 2, 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருந்ததால், தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், அக்டோபர், 3ம் தேதி, மறுபடியும் தேர்வு எழுதலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

        இந்நிலையில், இத்தேர்வில், ஜூலைக்கு பின், பி.எட்., முடித்தவர்களையும் அனுமதிக்க வேண்டும் என, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.அதில், "தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களும், புதிதாக பி.எட்., படித்தவர்களும், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த தகுதித் தேர்வு, அக்டோபர், 14ம் தேதிக்கு மாற்றப்படுகிறது' என, ஐகோர்ட் உத்தரவிட்டது.


பள்ளி கட்டட பணிகள்: தலைமையாசிரியர்கள் போர்க்கொடி


          பள்ளிகளில், அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம். எஸ்.ஏ.,) திட்டம் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டட பணிகளுக்கான பொறுப்பில் இருந்து, தலைமை ஆசிரியர்களை விடுவிக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் 2009ல் இருந்து, மத்திய அரசு நிதி மூலம் செயல்படும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் சார்பில், மக்கள் தொகை, பள்ளிகளிடையே உள்ள தூரம் போன்ற சில வரையறைகள் படி, நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.

பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு தமிழக அரசு உத்தரவு


பள்ளி வாகனங்கள் இயக்கம் முறைப்படுத்துதல் மற்றும் பராமரிப்பு சட்டம்,2012 என்ற பெயரில் இந்த மாதம் (அக்டோபர்,1) முதல் தேதியில் இருந்தே நடைமுறைக்கு வருகிறது.

பிற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலப்பயிற்சி


     பிற்படுத்தப்பட், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்‌சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,

மாணவர்களிடம் வர்த்தக மின் கட்டணம் வசூலிக்க தடை


   "அடுக்கு மாடி வீடுகளில், மாணவர்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் தங்கியிருந்தால், அவர்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு, வர்த்தகக் கட்டணம் வசூலிக்க முடியாது" என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் விரிவுரையாளர் தகுதித்தேர்வு


   தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், இன்று விரிவுரையாளர் தகுதித் தேர்வு நடக்கிறது.மொத்தம் 10 முக்கிய மையங்கள் மூலம், 76 துணைதேர்வு மையங்களில், இத்தேர்வு நடக்கிறது.

கல்வி தரத்தை மேம்படுத்த உலக வங்கி நிதியுதவி


         இந்தியாவில் பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக உலக வங்கி சுமார் 500 மில்லியன் டாலர் அளவிற்கு கடன் உதவி அளி்க்க உள்ளது. இந்தியாவில் பள்ளி உயர்கல்வி திட்டத்தை மேம்படுத்தும் வகையில் ராஷ்டீரிய மத்யமி்க் சி்‌க்ஷா அபியான் (ஆர். எம்.எஸ். ஏ) திட்டத்திற்கு சுமார் 500 மில்லியன் டாலர் அளவிற்கு கடன் உதவி வழங்க உள்ளது.


உதவிப் பேராசிரியர் பணி நியமனத்தை விரைந்து முடிக்க உத்தரவு - உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



1,100 உதவி பேராசிரியர் பணி நியமனத்தை, விரைந்து முடிக்குமாறு, ஆசிரியர் தேர்வாணையத்திற்கு (டி.ஆர்.பி.,), உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மேலும், உயர் கல்விக்கான பணி நியமனங்களை உடனுக்குடன் முடிப்பதற்கு வசதியாக,..

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும் பணி கிடைக்காதவர்கள் குமுறல்


         சிறப்பு ஆசிரியர் பணிக்கு, 10 மாதங்களுக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்த நிலையில், இதுவரை நியமனம் வழங்கப்படவில்லை.

குழந்தை திருமணம் தடைச்சட்டம் 2006 குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகல்வி முதன்மை செயலாளர் உத்தரவு


குழந்தை திருமணம் தடைச்சட்டம் 2006 குறித்த விழிப்புணர்வை பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் உரிய முறையில் பள்ளி தொகுப்பெடுகள் மற்றும் கலண்டர்களில்  இடம்பெறச் செய்தும் கலந்தாய்வுகள் நடத்தியும் மேம்படுத்தவும் . குழந்தை திருமணத்திற்கு உடந்தையாக செயல்படுவோருக்கு 2 ஆண்டுகள்  சிறை தண்டனை என்பதை அரசு / அரசு சாரா நிறுவனங்கள் மூலம் விளம்பரப்படுத்தவும் - பள்ளிகல்வி முதன்மை செயலாளர் உத்தரவு 

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு


click here & download  [Press Release No.358] ( Honble Chief Minister announces D.A rate hike for State Government employees )

    தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா ‌பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜூலை 1-ம் (1.7.2012)தேதி முதல் கணக்கீட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பன்பெறுவர். இதன் மூலம் அரசுக்கு ரூ. 1,443. 52 கோடி செலவாகும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி விபரம் சேகரிக்க உத்தரவு


      தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் விபரங்களை சேகரிக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தனியார், சுயநிதி, மெட்ரிக், கேந்திரிய வித்யாலயா, சி.பி.எஸ்.இ., ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில், மாணவர்கள், ஆசிரியர்கள், கட்டடங்கள், கருவிகள், பள்ளி அமைவிடம் என, அடிப்படை விபரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

ஆசிரியர் நியமன விதிமுறை தயார்?ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


     ஆசிரியர் நியமன விதிமுறைகள், இறுதி செய்யப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. "டி.இ.டி., தேர்வு என்பது, ஒரு தகுதித் தேர்வே; அதில் தேர்ச்சி பெறுபவரை, பணி நியமனம் செய்வதற்கு, உரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை, ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது.

கீ-ஆன்சர் குளறுபடிக்கு நிபுணர் குழுவே பொறுப்பு: டி.ஆர்.பி. திட்டம்


   ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கேள்விகள், அதற்கான, கீ-ஆன்சர் ஆகியவற்றை, சம்பந்தபட்ட துறைகளைச் சேர்ந்த, பேராசிரியர் அடங்கிய நிபுணர் குழு தயாரிக்கிறது. இவற்றில் ஏதேனும் குளறுபடி நடந்தால், சம்பந்தபட்ட நிபுணர் குழுவே பொறுப்பாகும் வகையில், விதிமுறையில் திருத்தம் கொண்டு வர டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.

ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறை: அரசிடம் விளக்கம் கேட்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு


      ஆசிரியர் நியமனத்தில் எத்தகைய இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றுவது என்பது தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - வேலூர் மாவட்டம் - நாளை மற்றும் 12.10.2012 நடைபெறவுள்ள EDUSAT PROGRAMME நடைபெறாது என அறிவிப்பு.


05.10.2012 மற்றும் 12.10.2012 ஆகிய நாட்களில் நடைபெற வேண்டிய நடைபெறாது என்பதையும், அதற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதையும் அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு லட்சம் சொற்களுடன் விரிவுபடுத்தப்பட்ட தமிழ்ப் பேரகராதி: வட்டார சொற்களுக்கு முக்கிய இடம்


  சென்னை பல்கலைக்கழகத்தின் விரிவு படுத்தப்பட்ட தமிழ் - தமிழ் - ஆங்கில அகராதி, ஆறு லட்சம் சொற்களுடன் தயார் செய்யப்பட்டுள்ளது. வட்டார வழக்குச் சொற்களுக்கு, இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

140 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுமதி


      மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்துவதில், பல்வேறு தொடர் நெருக்கடிகள் இருந்து வருவதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவங்க, தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும், 140 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக் கல்வித்துறை, தடையில்லா சான்று வழங்கியுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive