இது குறித்து, தமிழக பள்ளிக்கல்வி துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள் 91.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 397 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழ் பாடத்தில், 35 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், அரசு பள்ளிகளில் 87.90 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. 1,364 அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி கிடைத்துள்ளது. தமிழில் மட்டும், எட்டு பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, 1,761 பள்ளி கள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.
எனவே, 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தமிழில் 100 மதிப்பெண் பெற்ற அரசு பள்ளிகளின் 43 மாணவர்களுக்கு, சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து, குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற ஐந்து தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய அறிவுரை வழங்குவதுடன், 100 சதவீதம் எட்டிய தலைமை ஆசிரியர்களுடன், கருத்து பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...