Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

20 மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: புதிதாக 10 மழலையர் பள்ளி


              சென்னை மாநகராட்சியின், 20 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியும், புதிதாக, 10 மழலையர் பள்ளிகளும் துவங்கப்படுகின்றன. இதுகுறித்த விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.


மாணவர் சேர்க்கைக்கு தகுதி நிர்ணயம்: ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்


               "பொறியியல் கல்லூரிகளில் சேர, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, குறைந்தபட்ச தகுதியாக, 40 சதவீத மதிப்பெண் நிர்ணயித்தது செல்லும்" என சென்னை ஐகோர்ட் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.


வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள்: இணையதளத்தில் தகவல் வெளியிட உத்தரவு


              வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் குறித்த தகவல்களை, இணையதளத்தில் வெளியிட வேண்டும் என, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கு, கவர்னர் ரோசய்யா அறிவுறுத்தியுள்ளார்.


பள்ளி கல்வித்துறையில் உளவியல் வல்லுனர் பணி


              பத்து, "சைக்காலஜிஸ்ட்" பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை, விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.


ஊழலை ஒழிக்க இளம் பட்டதாரிகள் முன் வரவேண்டும்: ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலர்


              அண்ணா பல்கலை திருச்சி மண்டலத்தில் உள்ள , திருச்சி பாரதிதாசன் தொழில்நுட்ப பயிலகம், அரியலூர், பண்ருட்டி, திருக்குவளை பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நேற்று திருச்சியில் நடந்தது. விழாவில் 1,503 பேருக்கு பட்டங்களை வழங்கிய, ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலர் ஐசக் பேசியதாவது:


இயற்பியல் தேர்வு முறைகேடு: தனியார் பள்ளி நிர்வாகி கைது


              பிளஸ் 2 இயற்பியல் தேர்வு முறைகேடு தொடர்பாக, சம்மந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகியை, நேற்று இரவு, நாமக்கல் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவ்வழக்கில், தலைமறைவாக உள்ள பள்ளி ஆசிரியர்கள் மூவரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


அரசு உதவி பெறும் பள்ளியை அரசே ஏற்க உத்தரவு


            "குன்றத்தூரை அடுத்த, திருநாகேஸ்வரத்தில் உள்ள, வள்ளுவர் நடுநிலைப் பள்ளியை, அரசு எடுத்துக் கொள்ள வேண்டும்" என, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


அகவிலைப்படி 8 சதவீதம் உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்


              மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 8% உயர்த்த அமைச்சரவை ஒப்புதல். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 8 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டில்லியில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 72 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது 80% .
 
 

பழங்கால நாணயங்களை சேகரிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்


          கல்வித்துறையில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையில், கல்வியோடு சேர்த்து மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், பல்வேறு தலைப்புகளின் கீழ் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதில் பழங்கால நாணயங்களை சேகரிக்கும் பழக்கத்தையும் ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

3 இடங்களில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., அமைக்கப்படும்


           "ராமநாதபுரம், பெரம்பலூர், நாகை ஆகிய மூன்று மாவட்டங்களில், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள், அமைக்கப்படும்" என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

"கதை சொல்லி" அமைப்பு: நூலகத்துறை புதிய முயற்சி


              குழந்தைகளை நல்வழிப்படுத்த, நீதிக் கதைகள் கூறும் தன்னார்வ கதை சொல்லி அமைப்புகளை கிராம நூலகங்களில், ஏற்படுத்த, தமிழக பொது நூலகத்துறை, முயற்சி எடுத்துள்ளது. 

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களை நாமக்கல் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.


                      ப்ளஸ் 2 இயற்பியல் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட, தனியார் பள்ளி ஆசிரியர்களை, நாமக்கல் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், அடையாளம் கண்டுள்ளனர். 

காற்று இல்லாமலே காற்றாலையை இயக்கி மின்சாரம்: வாலிபர் சாதனை


              காற்று இல்லாமலே, காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரித்து செயல் வடிவம் காட்டியுள்ளார், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து வாலிபர். 

பட்டதாரிகளுக்கு யூனியன் வங்கியில் அதிகாரி பணி


                 மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம்


              "தஞ்சை மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் பயிற்சி முகாம் வரும் 25ம் தேதி துவங்குகிறது. இதில், ஆர்வமுடையோர் பங்கேற்கலாம்" என, மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விதிகளை அமல்படுத்தாத தனியார் பள்ளிகளை மூட பஞ்சாப் அரசு உத்தரவு


           சுமார் 473 தனியார் பள்ளிகளை மூட பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. 

அரசு பாலிடெக்னிக்குகளில் 579 புதிய ஆசிரியர் பணியிடங்கள்


              அரசு பாலிடெக்னிக்குகளில், 579 ஆசிரியர்கள் பணியிடங்களை உருவாக்கி, அரசு உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: இன்று அமைச்சரவை முடிவு - DINAMALAR


               மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 8 சதவீதம் உயர்த்துவது தொடர்பாக மத்திய அமைச்சரவை இன்று முடிவு செய்ய உள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு தொடர்பாக அறிக்கையின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்த்த உள்ளது.
 
 

தொடக்க கல்வி பட்டயதேர்வு (D.El.Ed) விண்ணப்பம் இணையதளத்தில் பதிவிறக்கலாம்

 Click Here 4 DOWNLOAD APPLICATION  HERE...

              "தொடக்க கல்வி பட்டயத்தேர்வில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்," என மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்தார்.
 
 

அகவிலைப்படி உயர்வு தாமதம், மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு ஏப்ரல் 23ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு


            இது குறித்து மத்திய அரசு ஊழியர் மற்றும் பணியாளர்களின் கூட்டமைப்பு பொது செயலாளர் திரு. K.K.N குட்டி அவர்கள் அறிவித்துள்ள அறிக்கையில்  4வது ஊதிய குழு அறிவிப்பின் மூலம் 1986 முதல் 6 மாதத்திற்கு ஒரு முறை மார்ச் மற்றும் செப்டம்பரில் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்படும். இதை எக்காரணத்தை கொண்டும் இழக்க நாங்கள் விரும்பவில்லை, எனினும் எந்தவித அறிவிப்பும் அரசிடம் இருந்து வரவில்லை.

8% அகவிலைப் படி உயர்வு 22.04.2013 தேதிக்கு முன் அறிவிக்க வாய்ப்பில்லை என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


            மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜனவரி 2013 மாத முதல் வழங்க வேண்டிய 8% அகவிலைப்படி உயர்வானது, மத்திய நிதி அமைச்சரின் வருகைக்கு பின் அறிவிக்கக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
 

டி.என்.பி.எஸ்.சி., பாடத்திட்டங்கள் மீண்டும் மாற்றம்


              டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், மீண்டும் மொழிப்பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குரூப்-4 தேர்வில், தமிழ் மொழிக்கான கேள்விகள் எண்ணிக்கை, முன்பு இருந்த படியே 100 ஆகவும், வி.ஏ.ஓ., தேர்வில் தமிழ் அல்லது ஆங்கிலத்திற்கான கேள்விகள் 30ல் இருந்து, 80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
 
 

கிருஷ்ணகிரி மாவட்டம் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகத்தின் சார்பில்விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம்

               புதன்  கிழமை (17.02.2013) காலை 9.00 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம்  அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர்கழகத்தின் சார்பில்  விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.




முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக 1591 பேர், பணி நியமனத்துக்கு அரசு அனுமதி


          தமிழகத்தில் புதியதாக 1591 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய, அரசு அனுமதி வழங்கியுள்ளது. 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரப்படி, அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப, கூடுதலாக முதுகலையாசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறைக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது.
 
 

பிளஸ் 2 கணிதம்: போனஸ் மதிப்பெண் இல்லை: தேர்வுத் துறை விளக்கம்


            பிளஸ் 2 கணிதத் தேர்வு புளூ பிரின்ட் அடிப்படையில் இருந்ததால் விடைத்தாள் மதிப்பீட்டில் இலவச மதிப்பெண் எதுவும் வழங்கப்படவில்லை என்று அரசுத் தேர்வுத் துறை கூறியுள்ளது.
 
 

பொறியியல் படிப்பு - விடைகாண வேண்டிய கேள்விகள்


            பள்ளியில் படிக்கும் ஒரு மாணவரை அழைத்து, நீ எதிர்காலத்தில் என்னவாக ஆக விரும்புகிறாய் என்று கேட்டால், ஒன்று டாக்டர் அல்லது இன்ஜினியர் அல்லது ஐ.ஏ.எஸ்., ஆகிய மூன்றில் ஏதேனுமொன்றை சொல்வார். இந்த மூன்றை தாண்டிதான் வேறு அம்சங்களை பெரும்பாலான மாணவர்கள் சிந்திக்கிறார்கள்.

மாணவர்களுக்கு திருப்பூரில் கட்டுரை போட்டி


          திருப்பூரில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவையொட்டி, மாணவ, மாணவியருக்கு கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது.


தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்!


1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays)
பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.

2. மதச்சார்பு விடுப்பு (Religious / Restricted Holidays)
வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.


அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஞாயிறன்று விடுமுறை


               அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஞாயிறன்று விடுமுறை அளிக்கப்படும் என சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக ரூ.1,000 வழங்கப்படும் எனவும், ஞாயிற்றுக்கிழமைக்கான உணவு கெட்டுப் போகாமல் சனிக்கிழமையன்றே வழங்கப்படும் எனவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive