Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மெட்ரிக் பள்ளிகளில் ஏழை குழந்தை சேர்க்கை: விண்ணப்பிக்க நாளை கெடு


               தனியார் மெட்ரிக் பள்ளிகளில் அரசு இட ஓதுக்கீட்டில் சேர, நாளைக்குள் (9ம் தேதி) விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
 

பெற்றோருக்கு உதவாத பிள்ளைகள்: ஐகோர்ட் நீதிபதி வருத்தம்


          "பெற்றோருக்கு உதவி செய்ய மனம் வராமல், கோர்ட் படியேறும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது," என, கர்நாடக ஐகோர்ட் நீதிபதி வருத்தம் தெரிவித்தார்.
 

வேலை வாய்ப்பு அலுவலகம் மாற்றுத்திறனாளிகளால் முற்றுகை


             காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத, மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு வழங்கக் கோரி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை, முற்றுகையிட்டனர்.
 

JEE தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 3,198 பேர் தேர்வு


           ஜெ.இ.இ., முதன்மை தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தமிழகத்தில் இருந்து, 3,198 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள், இணையதளங்கள் மூலம், இன்று முதல் இரண்டாம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
 

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பணி மூப்பு வெளியீடு


               இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான பணிமூப்பு பட்டியல் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
 

IGNOU B.Ed. Prospectus for the January 2014 Admission


APPLICATION FEE RS.1000
COURSE FEE RS.20000
LAST DATE 15.07.2013
ENTRANCE DATE : 18.18.2013

CLICK HERE FOR IGNOU B.Ed. Prospectus for the January 2014 session

நீதிமன்ற தீர்ப்பாணைக்குட்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு 01.06.1988-க்கு முந்தைய பணிக்காலத்தை தேர்வு நிலை / சிறப்புநிலை வழங்குவதற்கான அரசாணை நடைமுறைப்படுத்த அரசு விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவு

           ஐந்தாவது ஊதியக் குழுவின் காலமான 01.06.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளின் தலைமையாசிரியராக பதவியுயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு 01.06.1988 முந்தைய பணிக்காலத்தை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நிலையில் தேர்வு நிலை/ சிறப்பு நிலை நிர்ணயிக்க விவரம் கோரியுள்ளதாக அறியப்படுகிறது.

நாசா அறிவியல் போட்டி: இந்திய மாணவர்கள் சாதனை


             அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசா சார்பில் நடத்தப்பட்ட, "கிரேட் மூன்பக்கி ரேஸ்" எனப்படும், அறிவியல் போட்டிகளில், இரு பிரிவுகளில் பங்கேற்ற இந்திய மாணவர்கள், முதல் பரிசை வென்றுள்ளனர். அத்துடன், இந்திய மாணவர் வடிவமைத்த வாகனத்திற்கு, சிறப்பு பரிசும் கிடைத்துள்ளது.

ஓவிய கலையில் விருப்பமா? காத்திருக்கிறது அரசு கவின் கலை கல்லூரி


              நன்றாக ஓவியம் வரையும் திறன் உடைவர்கள் தங்கள் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள, சென்னை, அரசு கவின் கலை கல்லூரியில் பட்ட படிப்புகள் காத்திருக்கின்றன.

மே 24ல் சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு


             சென்னை பல்கலைக்கழகத்தின், தொலைநிலை கல்வி இளங்கலை தேர்வுகள், இம்மாதம், 24ம் தேதி துவங்குகிறது.

அடுத்த கல்வியாண்டு புத்தகங்கள்: பள்ளி வாரியாக அனுப்பும் பணி தீவிரம்


           ஈரோடு மாவட்டத்தில் அடுத்த கல்வியாண்டில் கல்வி பயிலும், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 வகுப்பினருக்கு பள்ளி வாரியாக இலவச புத்தங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது.

நாளைமுதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்


                தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க வியாழக்கிழமைமுதல் (மே 9) விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது.
 

VIT UNIVERSITY - EEE Department கலந்தாய்வு தேதி வெளியீடு


            வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் பி.டெக். படிப்பில் மாணவர்களை சேர்க்க மே 15ம் தேதி முதல்  கலந்தாய்வு துவங்க உள்ளது.
 

2013-14ஆம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு சேர்கை அறிவிப்பு


விண்ணப்பம் விநியோகம் : மே13-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை
விண்ணப்பக்கட்டணம் : பொது: ரூ.600, எஸ்.சி/எஸ்.டி: ரூ. 300
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் ஜூன் 3ந்தேதி
 

இந்தியாவிலேயே முதன்முறையாக "ஏசி" வசதியுடன் நிழற்குடை


             இந்தியாவிலேயே முதன்முறையாக, குளிர் சாதன வசதி செய்யப்பட்ட பயணிகள் நிழற்குடை, கும்பகோணத்தில் திறக்கப்பட்டுள்ளது.
 
 

கோவாவில் நடந்த அபாகஸ் போட்டி தமிழக மாணவர்கள் சாதனை


             கோவா மாநிலத்தில் தேசிய அளவில் நடந்த அபாகஸ் போட்டியில் நெல்லை, குமரி மாவட்ட மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர்.
 
 

கோவையில் கூடுதல் கே.வி., பள்ளிகள் துவங்க மத்திய அரசுக்கு கோரிக்கை


            சூலூர், கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்தில், பொன்விழா துவக்க விழா நடந்தது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ், கேந்திரிய வித்யாலய பள்ளிகள் செயல்படுகின்றன. மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதற்காக, 1963ல் நாடு முழுவதும் பள்ளிகள் துவக்கப்பட்டன.
 
 

ரத்த தானம் பற்றி அறிவோம் ரத்த தானம் செய்வோம்...


 
                ரத்த தானம் என்பது ரத்தம் தேவைப்படுவோருக்கு ஒருவர் ரத்தம் கொடுத்து உதவுவதாகும். இல்லாத ஒருவருக்கு இருக்கும் ஒருவர் கொடுத்து உதவும்போது அங்கு தேவை நிறைவடைகிறது. இதனைத் தான் தானம் என்கிறோம்.

ரத்த தானம் பற்றி அறிவோம் ரத்த தானம் செய்வோம்...


 
                ரத்த தானம் என்பது ரத்தம் தேவைப்படுவோருக்கு ஒருவர் ரத்தம் கொடுத்து உதவுவதாகும். இல்லாத ஒருவருக்கு இருக்கும் ஒருவர் கொடுத்து உதவும்போது அங்கு தேவை நிறைவடைகிறது. இதனைத் தான் தானம் என்கிறோம்.

+2 விற்க்குப்பிறகு படிப்பை தேர்ந்தெடுப்பதில் குழப்பமா?

 
         பிளஸ் 2 முடித்த அனைவருக்கும் அடுத்து என்ன படிப்பை தேர்ந்தெடுப்பது என்பதில்தான் குழப்பம் அதிகமாக இருக்கும். குழப்பத்தை தீர்ப்பதற்கு நம்மை நாமே ஓர் ஆய்வுக்கு உட்படுத்தினால் எளிதாக விடை கண்டுகொள்ளலாம். அதற்கு முதலில் நம்மிடம் உள்ள திறன்கள் என்ன என்பதை காண வேண்டும்.

கல்வி மற்றும் நிர்வாகத்தால் மேம்படும் தென் மாநிலங்கள்


              சிறந்த அரசாங்கம், கல்வி மற்றும் திறமையான ஆட்சி ஆகியவற்றால் தென் மாநிலங்கள் வட மாநிலங்களை விட மேம்பாடான நிலையில் இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
 

31.05.2013 நிலவரப்படி ஆசிரியர் பயிற்றுநர்கள் காலிப் பணியிட விவரம் சேகரிக்க - அனைவருக்கும் கல்வி இயக்கம்

              அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து வட்டார வளமையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE / CRTE) 31.05.2013 அன்றைய நிலவரப்படி காலிப் பணியிட விவரம் பாடவாரியாக சேகரிக்க அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளதாக அறியப்படுகிறது. இதையடுத்து மாநிலத்தில் உள்ள அனைத்து வட்டார மையங்களும் இன்று மாலைக்குள் காலிப்பணியிட விவரம் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி தகவல் பலகையில் 15 நிமிடத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிட உத்தரவு


          "பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிட்ட, 15 நிமிடங்களில், பள்ளி தகவல் பலகையில், தேர்வு முடிவுகளை காட்சிப்படுத்த வேண்டும். இதை, செயல்படுத்த தவறும் தலைமை ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்" என , பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.
 
 

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி: அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை


            பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாணவ, மாணவியர்களின் உயிரிழப்பை தடுக்க குட்டைகள், ஏரிகள், கற்கள் தோண்டப்பட்ட குவாரிகள் மற்றும் மணல் குவாரிகளை, பொதுப்பணி துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்" என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
 

கல்வித்துறை ஆய்வக உதவியாளர்கள் கோரிக்கை


           கல்வித்துறையில், ஆய்வக உதவியாளர்களுக்கும் உதவியாளர் பணி வழங்கவேண்டும் என, தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 

ஆங்கில வழிக் கல்வி மாணவர் சேர்க்கை குறைவை தடுக்க யுக்தி


           அரசு பள்ளிகளில், குறைந்து வரும் மாணவர்கள் சேர்க்கையை தவிர்க்கும் வகையில், ஆங்கில வழிக் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
 

பி.காம்., படிப்பிற்கு கடும் போட்டி


          அரசு கலை அறிவியல் கல்லூரியில், விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பங்களை பெற்று சென்றனர். தமிழகம் முழுவதும் உள்ள, 8.5 லட்சம் மாணவ மாணவியர், பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதியுள்ள நிலையில், வரும் 9ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
 

மாநிலம் முழுவதும் 10 மாணவர்களுக்கும் குறைவாக படிக்கும் தொடக்க, நடுநிலை பள்ளிகளை மூட ஆந்திரா அரசு உத்தரவிட்டுள்ளது


          ஆந்திராவில் 10 மாணவர்களுக்கும் குறைவாக படிக்கும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை மூடும் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 

ஆசிரியருக்கு தகவல் அளிக்காத பொதுத் தகவல் அலுவலர் இழப்பீடு வழங்க வேண்டும்!


               ஆசிரியர் ஒருவருக்கு இழப்பீடு வழங்கும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பொதுத் தகவல் அலுவலருக்கு நுகர்வோர் மன்றம் ஆணையிட்டுள்ளது.
 
 

VIT UNIVERSITY - EEE Department நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு


          வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில், விஐடிஇஇஇ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
 

தமிழகத்தில் ஸ்டெம்செல் ஆராய்ச்சி மையம்: முதல்வர்


           இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் ஸ்டெம்செல் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
 

ஓய்வூதியத் துறையில் விரைவில் எஃப்.டி.ஐ. வரம்பு அதிகரிப்பு


          காப்பீடு மற்றும் ஓய்வூதியத் துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டு (எஃப்.டி.ஐ) வரம்பு விரைவில் அதிகரிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான மசோதா 2008-ம் ஆண்டிலிருந்து மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள நிலையில் அவர் இத்தகவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக் கல்வித் துறையில் கருணை அடிப்படையில் 396 இளநிலை உதவியாளர் பணியிடத்தை நிரப்ப தமிழக முதல்வரிடம் கோரிக்கை


            பள்ளிக் கல்வித் துறையில் கருணை அடிப்படையில் காத்திருப்போருக்கு 396 இளநிலை உதவியாளர் பணியிடத்தை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்து தமிழக முதல்வர் ஜெலலிதாவை நேரில் சந்தித்து கடிதம் அளித்தார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive