Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

GROUP - I C SERVICES EXAMINATION DISTRICT EDUCATIONAL OFFICER

D.E.O EXAMமாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு வெளியாகும் நாள் பிப்ரவரி முதல் வாரம்.

தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 

ஆசிரியர் தகுதித் தேர்வில்(டிஇடி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு இன்று 32 மாவட்டங்களில் நடக்கிறது.


           ஆசிரியர் தகுதித் தேர்வில்(டிஇடி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு இன்று 32 மாவட்டங்களில் நடக்கிறது. அரசுப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான தகுதித் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி( தாள்1), 18ம் தேதி(தாள் 2) நடந்தது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் தாள் 1ல் 2 லட்சத்து 65 ஆயிரத்து 568, தாள் 2ல் 4 லட் சத்து 19 ஆயிரத்து 898 பேர் எழுதினர். இவற்றில் தாள் 1ல் 12 ஆயிரத்து 596 பேரும், தாள் 2ல் 18 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ள னர்.

வாகை சூட வாழ்த்துவோம்! - சிறப்புக்கட்டுரை 2

பாடப்பகுதி குறிப்புகள் - 2வது வாரம்

தமிழ்

பகுதி I: 20-01-2014 முதல் 31-01-2014 வரை

01. படிவங்கள் நிரப்புதல் [வங்கிக்கணக்கில் பணம் செலுத்து படிவம் (84), வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கும் படிவம் (146), தொடர் வண்டி இருக்கை முன்பதிவுப் படிவம் (228)]
02. கொடுக்கப்பட்ட பத்தியில் அமைந்துள்ள ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கம் செய்தல் (31, 83, 102, 172)

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு கணிப்பொறி அறிவியல் தேர்வை வெற்றிகொள்ள...


              சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வுகள் நெருங்கிவரும் வேளையில், மிக முக்கியத் தேர்வான கணிப்பொறி அறிவியல் தேர்வில் எப்படி அதிக மதிப்பெண்கள் பெறுவது என்ற நுட்பத்தை அறிய வேண்டியது அவசியம்.
 

அடைவுத்திறன் தேர்வு: ஆசிரியர்,மாணவர்களுக்கு தனி வினாத்தாள்.


          தமிழகத்தில், நாளை துவங்க உள்ள, 3, 5, 8ம் வகுப்பு ஆசிரியர், மாணவர்களுக்கென அடைவுத்திறன் தேர்விற்கான வினாத்தாள்கள் தனித்தனியாக தரப்படும் என, அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

அரசு அறிவித்த திட்டங்களை ஒரு மாதத்துக்குள் முடிக்க கெடுபிடி

         தமிழக அரசின் சார்பில், நடப்பு நிதியாண்டில் செயல்படுத்த வேண்டிய, நிர்ணயிக்கப்பட்ட திட்டங்களை, வரும் பிப்ரவரி கடைசிக்குள் முடிக்க வேண்டும்' என, உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருவதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
 

சென்னையில் இன்று சத்துணவு ஊழியர் சங்க மாநாடு

             சத்துணவு ஊழியர் சங்க மாநாடு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று நடக்கிறது.  தமிழகத்தில் சத்துணவு திட்டத்திற்கென்று தனி துறை ஏற்படுத்த வேண்டும். வாழ்வதற்கு தேவையான ஊதியம் வழங்கி, பணி விதிமுறைகள் உருவாக்கி முழு நேர பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
 

பிரெஞ்ச் கயானாவுக்கு நிகரான குலசேகரப்பட்டினம்: வேண்டுமென்றே புறக்கணிக்கிறதா இஸ்ரோ?

 
          இந்தியாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான உயர்நிலைக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும் முன்பாகவே, மூன்றாவது தளம் ஸ்ரீஹரிகோட்டாவில்தான் என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன். 
 

தமிழக முழுவதும் 27 விடுதிகளுக்கு சொந்தக் கட்டிடம் கட்ட ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு

 
           தமிழகம் முழுவதும் 27 விடுதிகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட ஒரு விடுதிக்கு ரூ.1 கோடி வீதம் மொத்தம் ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

RMSA School Lab Construction - Regarding

             அரசுப் பள்ளிகளில் ரூ.161 கோடியில் வகுப்பறை, ஆய்வுக்கூடம்: கட்டுமானப் பணிகள் பொதுப்பணித் துறையிடம் ஒப்படைப்பு

           தமிழகத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை மற்றும் அறிவியல் ஆய்வுக் கூடங்கள் ரூ.161 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 29,528 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு.


          ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 29,528 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை (ஜன.20) தொடங்கி வரும் 28-ம்தேதி வரை நடைபெற உள்ளது. 

TNTET-2013 CV - கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

         TNTET-2013 CV :சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை ஆய்வு செய்ய 4 இயக்குனர்கள், 20-க்கும் மேற்பட்ட இணை இயக்குனர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அனுமதியின்றி கல்விச்சுற்றுலா அழைத்துசென்றால் கடும் நடவடிக்கை

      அனுமதியின்றி கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு மார்ச், ஏப்., மாதங்களில் முழு ஆண்டு தேர்வு நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக மாணவர்களை கல்விச்சுற்றுலா அழைத்து செல்ல பள்ளிகள் தயாராகி வருகின்றன. கடந்த காலங்களில் கல்விச் சுற்றுலாவின் போது எதிர்பாராதவிதமாக சில மாணவர்கள் உயிரிழந்தனர்.

நெட் தேர்வை எதிர்கொள்வது எப்படி? - Hints


   நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் ஆசிரியராவதற்கான தகுதி பெற முடியும். அத்துடன், ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர்ந்து படிக்க உதவித் தொகையும் பெற முடியும். இந்தத் தேர்வில் எளிதாக வெற்றி பெற மூன்று விஷயங்களை முனைப்பாக கடைப்பிடிக்க வேண்டும். ஒன்று, தேர்வுக்கு தயார் ஆகுதல். இரண்டாவது, தேர்வுக்கான பயிற்சி. மூன்றாவது தேர்வை முறையாக எழுதும் முறை.

10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும்போதே, வேலைவாய்ப்பு பதிவுக்காக, மாணவர்களிடம், ரேஷன்கார்டு விவரமும் சேகரிப்பு

           நடப்பாண்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும்போதே, வேலைவாய்ப்பு பதிவுக்காக, மாணவர்களிடம், ரேஷன்கார்டு விவரமும் சேகரிக்கப்பட்டுள்ளது.

 

மூடுபனி மற்றும் கடும் குளிரால் ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை

     வட மாநிலங்களில், கடந்த ஒரு மாதமாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதன் காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், பணிக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் சிறந்த ஆசிரியராக இந்திய வம்சாவளி பேராசிரியை மீரா சந்திரசேகர் தேர்வு.


         வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை மீரா சந்திரசேகர், அமெரிக்காவில் 2014ஆம் ஆண்டின் சிறந்த ஆசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 

பி.எப்., சந்தாதாரர்களுக்கு நிரந்தர கணக்கு எண்.


           தொழிலாளர் சேமநல நிதியம் (இ.பி.எப்.ஓ.,), 5 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கு,நிரந்தர கணக்கு எண் வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், ஒருவர், வேறு நிறுவனத்திற்கு மாறினாலும், இ.பி.எப்., நிரந்தர கணக்கு எண்ணை, தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது, ஒரு நிறுவனத்தில் இருந்து, வேறு நிறுவனத்திற்கு மாறுபவர், தன், பழைய நிறுவனத்தின் இ.பி.எப்., கணக்கை, புதிய நிறுவனத்திற்கு, இணையதளம் வாயிலாகவே மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி, கடந்த 2013ம் ஆண்டு, அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியுமா?: டி.இ.டி. தேர்வர்கள் கவலை

         சான்றிதழ்களில் கல்வி அலுவலர்களின் கையெழுத்து பெற போதிய கால அவகாசம் இல்லாத நிலையில் 20ம் தேதி துவங்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாமில் பங்கேற்க முடியுமா என ஆசிரியர் தகுதி தேர்வர் (டி.இ.டி.,) கவலை அடைந்துள்ளனர்.

புகைப்படத்துடன் 60 லட்சம் விடைத்தாள்: பிளஸ் 2 தேர்வுக்காக அச்சடிப்பு தீவிரம்

                   பிளஸ் 2 தேர்வுக்காக மாணவர் புகைப்படம், பதிவு எண்கள் உள்ளிட்ட பல விவரங்களுடன் 60 லட்சம் விடைத்தாள்களின் முதல் பக்க தாள் அச்சடிக்கும் பணி சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது.

ஏகலைவா பள்ளி ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம்

         ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்ட பணி ஆணை நேற்று வழங்கப்பட்டது.

திறனாய்வுத் தேர்வு எழுதும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் முறையாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


           பள்ளிகளில் படிக்கும் திறமையான மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக தேசிய திறனாய்வுத் தேர்வு, தேசிய வருவாய் மற்றும் திறன் தேர்வு, கிராமப்புற மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு என பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

B.Edக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெற TNTEU செல்பவர்கள் கவனத்திற்கு

           B.Edக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெற "தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் கல்லூரி"க்கு செல்பவர்கள் 150 ரூபாய்க்கு DD எடுத்து செல்ல வேண்டும். மேலும் B.Ed பயின்ற கல்லூரியில் ஒரு சான்றிதழ் பெற்று செல்ல வேண்டும்.
 

முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள்...


           ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய விடைகளை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இதனால், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவது தாமதமானது. இந்தநிலையில், நீதிமன்ற உத்தரவின்படி இரண்டாம் தாள் விடைத்தாள் அனைத்தையும், மறு மதிப்பீடு செய்து, புதிய தேர்வு முடிவை, டி.ஆர்.பி., வெளியிட்டது.ஆசிரியர் தகுதித் தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு, ஜன., 20 முதல் 27 வரை, அந்தந்த மாவட்டங்களில் நடக்கிறது.தற்போதைய சான்றிதல் சரிபார்ப்பு சென்னை உயர்நீதி மன்ற ரிட் மனுக்கள் மீது வழங்கப்படும் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என ஆசிரியர் தேர்வு வாரியம்அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ..

TNTET 2013 - Paper 1 - All Passed Candidates Detail Now Available.

Paper 1 - All Passed Candidates Detail

TNTET 2013 - Paper 1 -  All Passed Candidate's Mark Detail with DOB & Caste Detail Now Available in www.TrbTnpsc.com

Thanks to our Padasalai Reader, Dindukkal.
              

RTI Letter

RTI Letter 

Vinayaga Univ M.Phil Incentive for Middle School BT - Regarding - Click HereDEEO

Thanks to Mr. Subagar, Gudiyatham, Vellore Dt.

TET CV குறித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் பத்திரிக்கை செய்தி


         புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் பத்திரிக்கை செய்தி : அவசரம்.  
         ஆசிரியர் தகுதித்தேர்வில் தோ்ச்சி  பெற்றவா்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 நாட்கள் நடைபெற இருக்கிறது. .மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் தகவல்.
 

வாகை சூட வாழ்த்துவோம்!


கடையனையும் கடைதேற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வணக்கம்!

                கடந்த இரு வாரங்களாக தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடையனையும் கடைதேற்றுவதற்கு (95% தேர்ச்சி விழுக்காடு பெற வைப்பதற்கு) என்னென்னவெல்லாம் செய்யலாம், எப்படியெப்படியெல்லாம் செய்யலாம் என பல கருத்தரங்கங்களும், ஆய்வரங்கங்களும் அரசு மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளாலும் நடத்தப்பெற்றன. அவ்வுயரிய நோக்கத்தை எட்டும் வகையில் ஆசிரியர்களுக்கும், மாணவ மாணவியர்களுக்கும் உதவிடும் வகையில் சிந்தித்ததன் விளைவே இக்கட்டுரை.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை தள்ளி வைக்க கோரிக்கை

          ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும், பட்டப்படிப்புடன் பி.எட். படித்தவர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தியது. 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். அதற்கான விடைகளும், பின்னர் முடிவுகளும் வெளியிடப்பட்டது.

மறு தகுதித்தேர்வு நடத்தக் கோரிய கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மனு தள்ளுபடி

              மறு தகுதித்தேர்வு நடத்தக் கோரி வேலை நீக்கம் செய்யப்பட்ட மேல்நிலைப் பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கணினி ஆசிரியர்கள் தேர்வு விவகாரம் தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய முடியாது ஐகோர்ட் தீர்ப்பு

           சென்னை உயர் நீதிமன்றம் கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்ததை, மறு  பரிசீலனை செய்யக்கோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலை பள்ளிகளில்  பணியாற்றி வந்த 1,800 கணினி ஆசிரியர்கள் பணியை நிரந்தரப்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்தது.
 

நாளை 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து

            தமிழகம் முழுவதும், நாளை, 43,051 மையங்களில், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. நாடு முழுவதும், ஜனவரி, 19ம் தேதி, போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.
 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்ததால் 2,500 ஒப்பந்த ஆசிரியர்களை நீக்க முடிவு

 
        பீகாரில், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட, 2,500 ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்ததால், அவர்களை நீக்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

லோக்சபா தேர்தல் எப்போது? உள்ளூர் தகவலை திரட்டுது கமிஷன்

              லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஏதுவாக, மாவட்டந்தோறும் கோயில் திருவிழா, முக்கிய நிகழ்வுகள் குறித்த தகவல்களை அனுப்ப, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. லோக்சபா தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடு குறித்த ஆலோசனைகளை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.
 

10ம் வகுப்பு தேர்வு கட்டணம் 23ம் தேதிக்குள் செலுத்த தேர்வு துறை உத்தரவு

           பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி முடிகிறது.  இந்த ஆண்டு சுமார் 12 லட்சம்  மாணவ, மாணவியர்  தேர்வு எழுதுகின்றனர். அதற்கான இறுதிப் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive