Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அவசரமாக துவங்கிய ஆசிரியர் இடமாறுதல் 'கவுன்சிலிங்' நிறுத்தம்

        அரசு அறிவித்த தேதிக்கு முன், ஈரோடு மாவட்டத்தில், ஆசிரியர் இடமாறுதல், 'கவுன்சிலிங்' நடத்த முயன்றதால், ஆசிரியர்கள், அதிகாரிகள் இடையே மோதல் ஏற்பட்டது; பின், அதிகாரபூர்வமற்ற கவுன்சிலிங் நிறுத்தப்பட்டது.
 

தலைமை ஆசிரியர்கள்75 பேருக்கு 'புரமோஷன்'

          தமிழக தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள், 75 பேருக்கு, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது; இதற்கான, 'கவுன்சிலிங்' நாளை மறுநாள் நடக்கிறது.தமிழக அரசு பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்கள் மற்றும் பணி நிரவல், பணி மாறுதலால் காலியாகும் இடங்களுக்கு, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், 8ம் தேதி துவங்குகிறது; முதலில், தொடக்கக் கல்வி கவுன்சிலிங் நடக்கவுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6% உயர்கிறது: செப்டம்பர் இறுதியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

       மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு

     அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கடைசி தேதி வரும் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் பிறப்பித்தார்.

 

10-ஆம் வகுப்பு: முதல் நாளில் 73 ஆயிரம் மாணவர்கள் வேலைவாய்ப்புக்குப் பதிவு

     பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டது. இதையடுத்து, வேலைவாய்ப்புக்காக முதல் நாளிலேயே 73,294 மாணவர்கள் இணையவழி மூலம் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.வருகிற 19-ஆம் தேதி வரை பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு வழங்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

 

கிடப்பில் 'ராஜ்ய புரஸ்கார்' விருது 1,500 மாணவர்கள் காத்திருப்பு

        தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சாரணர் இயக்கம் சார்பில் வழங்கும் 'ராஜ்ய புரஸ்கார்' எனும் கவர்னர் விருது வழங்காமல் கிடப்பில் உள்ளது. இதற்காக ஆயிரத்து 500 மாணவர்கள் காத்திருக்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் இவ்விருதுக்கான எழுத்து தேர்வு நடத்தப்படும். 13 வயதுக்குட்பட்ட 8, 9ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் பங்கேற்கலாம். தேர்வு செய்யப்படுவோர் பட்டியல் சென்னையிலுள்ள சாரணர் இயக்க தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும். 
 

அறிவுசார் சொத்துரிமைத் திருட்டை ஊக்குவிக்கிறதா ஃபேஸ்புக்?

    ஃபேஸ்புக்கில் இப்போது வீடியோ பார்ப்பது மிகவும் எளிதாகிவிட்டது. நியூஸ்ஃபீடில் பார்த்தால் நிறைய வீடியோக்கள் தென்படுகின்றன. இதுதான் கூகுளின் யூடியுபூக்குச் சிக்கலாக உள்ளது. இதனால் ஃபேஸ்புக் - யூடியூப் ஆகிய இரு நிறுவனங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
 

முதல் போக்குவரத்து சிக்னல் விளக்கை பொருத்திய நாட்டை கவுரப்படுத்தியது கூகுள்


முதல் போக்குவரத்து சிக்னல் விளக்கை பொருத்திய நாட்டை கவுரப்படுத்தியது கூகுள்

உலகிலேயே முதல் போக்குவரத்து சிக்னல் விளக்கை பொருத்திய கிளவெளன்ட் நாட்டை கூகுள் கவுரவப்படுத்தியுள்ளது. 

புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்த இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள்


புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்த இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள்

  புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய புதிய மருத்தினை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். 

சைக்கிள் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி!

    இரைச்சல், புகையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு போன்றவற்றால் உலகம் ஸ்தம்பித்துவரும் நிலையில் சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மீண்டும் சைக்கிள் பயணத்தை ஊக்குவித்து வருகின்றன. சைக்கிளை ஓட்ட விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக பேட்டரியில் இயங்கும் சைக்கிளை தயாரித்திருக்கிறார் ஒரு இங்கிலாந்துக்காரர்.

ரூ.30 கட்டணம் செலுத்தினால் இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை 333 இடங்களில் வழங்க ஏற்பாடு

     தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களிலும், ரூ.30 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

       விருதுநகர்:பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பத்து பாடங்களின் ஆசிரியர்களுக்கு ஆக.,11 முதல் மூன்று நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறைந்தது குறித்து பள்ளிக்கல்வித்துறை மாவட்டவாரியாக ஆய்வு மேற்கொண்டது. குறிப்பிட்ட பத்து பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி குறைந்ததுதான் அதற்கு காரணம் என கண்டறியப்பட்டது. அப்பாடங்களின் ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்து இந்தாண்டு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

100 சதவீதம் தேர்ச்சி:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தலைமையாசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

         அரசு பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 வில் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவது தொடர்பான தலைமையாசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் 5 தினங்கள் நடைபெற்றன.திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் நிகழ் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில் தலைமையாசிரியர்களுக்கான தலைமை பண்பு குறித்த சிறப்பு பயிற்சி முகாம் 5 தினங்கள் நடைபெற்றன.

ஆசிரியர் டிப்ளமோ: நாளை இரண்டாம் கட்டக் கலந்தாய்வு

      தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் சேருவதற்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக.7) நடைபெற உள்ளது. 
 

வாகன விபத்தை தடுக்க புதிய தொழில்நுட்பம்: 8 ம் வகுப்பு சிவகங்கை மாணவி உருவாக்கம்

       வாகன வேகத்தால் விபத்து ஏற்படுவதை கட்டுப்படுத்த மின்காந்த சக்தி மூலம் 'பிரேக்' பிடிக்கும் தொழில்நுட்பத்தை சிவகங்கை மாணவி எஸ்.லக் ஷனா உருவாக்கியுள்ளார்.

பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர் இடையே பாலின வேறுபாடு பிரச்னையைப் போக்க, 'ஜென்டர் சாம்பியன்' திட்டம் மத்திய அரசு உத்தரவு

         பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர் இடையே பாலின வேறுபாடு பிரச்னையைப் போக்க, 'ஜென்டர் சாம்பியன்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. 
 

என்சிடிஇ புதிய விதிமுறை எதிரொலி: தொலைதூரக்கல்வி பி.எட். சேர்க்கையில் விரைவில் மாற்றம்

         தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் புதிய விதிமுறை காரணமாக, தொலைதூரக்கல்வி பி.எட். மாணவர் சேர்க்கையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மட்டுமே இனி தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேர முடியும்.

இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மட்டுமே இனி தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேர முடியும்!

         தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் புதிய விதிமுறை காரணமாக, தொலைதூரக்கல்வி பி.எட். மாணவர் சேர்க்கையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. 
 

கடந்தாண்டு கலந்தாய்வில் பங்கேற்றவர் இந்தாண்டு பங்கேற்க முடியாது!

     ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் தளர்த்தப்பட்ட நிபந்தனையிலும் குழப்பமா: ஆசிரியர்கள் குமுறல்

         ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பதற்காக கல்வித் துறையின் தளர்த்தப்பட்ட நிபந்தனையிலும் குழப்பம் நீடிப்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

DSE - Computer Instructor Regulation Order

           பள்ளிக்கல்வி - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 140 கணினி பயிற்றுநர்களுக்கு பணிவரன்முறை செய்து முறையான நியமன ஆணை வழங்கி உத்தரவு

  1. 140 Computer Instructor Posts Regulation Order - Click Here

செவிலியர் பட்டயப் படிப்பு: 9,401 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

     தமிழக அரசு செவிலியர் பட்டயப் படிப்புக்கு 9,401 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அரசு ஊழியர்கள் வாங்கும் பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்கள்

          அரசு ஊழியர் வீடு கட்ட, அரசிடம் பெறும் கடனுக்கு, குறைந்தபட்சம், 5.50 சதவீதம்; அதிகபட்சம், 10 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது.நடப்பு நிதியாண்டு, அரசு வழங்கும் கடன்களுக்கான, வட்டி விகிதம் விவரம் குறித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் மொழி அறிதலை அளவிடும் ஜெர்மன் கருவி

          காந்திகிராம பல்கலையில் ஜெர்மன் கருவி மூலம் குழந்தைகளின் மொழி அறிதல் திறன் அளவிடப்பட்டு, மேம்படுத்தப்பட உள்ளது.ஜெர்மன் லிப்னிஸ் ஹானோவர் பல்கலை, காந்திகிராம பல்கலை மனையியல் துறை இணைந்து குழந்தைகள் ஆய்வு மையத்தை அமைக்கின்றன. இந்த மையம் மூலம் குழந்தைகளின் மொழி அறிதல் திறன் அளவிடப்பட்டு மேம்படுத்தப்படும். 


சி.எஸ்.ஐ.ஆர். "நெட்' தேர்வு அறிவிப்பு

       அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) சார்பில் நடத்தப்படும் "தேசிய அளவிலான தகுதித் தேர்வுக்கான (நெட்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை இதுவரை பொறியியல் படித்தவர்களும் எழுதி வந்தனர். இந்த நிலையில், நடைபெற உள்ள டிசம்பர் மாத "நெட்' தேர்விலிருந்து பொறியியல் அறிவியல் பாடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 

திரிசங்கு நிலையில் அரசு ஊழியர்

          தமிழகத்தில் 2003 ஏப்., 1க்கு பின் அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி 2006 ஜூன் 1 முதல் ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. 
 

ஒளியாற்றல் தேசிய கருத்தரங்கு பரிசு அள்ளலாம் பள்ளி மாணவர்கள்

             ஒளியாற்றலை சமுதாய நற்செயலுக்கு பயன்படுத்துவதில் உள்ள வாய்ப்பு, சவால்கள்' குறித்து பள்ளி மாணவர்களுக்கான தேசிய கருத்தரங்கு ஆக., 31ல் சென்னையில் நடக்கிறது.
 

பள்ளிகளில் பொருட்காட்சி: தடை விதித்தது கல்வித்துறை

        அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வளாகங்களில், பொருட்காட்சி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது.
 

அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கில பயிற்சி

          அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பிரிட்டிஷ் கவுன்சில் மூலம், ஆங்கில பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழக அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதுடன், தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளிக்கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், 'அரசு பள்ளியில் ஆங்கில கல்வி சரியாகக் கிடைப்பதில்லை' என, பெரும்பாலான பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.

'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' பயன்படுத்த இன்ஜினியரிங் மாணவர்களுக்கு தடை?

         மாணவர்களிடம் தவறான தகவல் பரவுவதைத் தடுக்கவும், கல்வித் தரம் பாதிக்காமல் இருக்கவும், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' பயன்பாட்டுக்குத் தடை விதிக்க, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. 

குழந்தைகள் மொழி அறிதலை அளவிடும் ஜெர்மன் கருவி

         காந்திகிராம பல்கலையில் ஜெர்மன் கருவி மூலம் குழந்தைகளின் மொழி அறிதல் திறன் அளவிடப்பட்டு, மேம்படுத்தப்பட உள்ளது.ஜெர்மன் லிப்னிஸ் ஹானோவர் பல்கலை, காந்திகிராம பல்கலை மனையியல் துறை இணைந்து குழந்தைகள் ஆய்வு மையத்தை அமைக்கின்றன. இந்த மையம் மூலம் குழந்தைகளின் மொழி அறிதல் திறன் அளவிடப்பட்டு மேம்படுத்தப்படும். 

பொறியியல் படிப்பின் எதிர்காலம் என்ன ஆகும்?

        தமிழகத்தில், 536 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளுக்கு நடந்த கலந்தாய்வுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் கீழ் உள்ள இடங்களில் காலி ஏதும் இல்லை; இடங்கள் நிரம்பி விட்டன. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் கல்வி பயில பல்வேறு கல்விப் பிரிவுகளில் இடம் இருந்தபோதும், 94,500 இடங்கள் நிரம்பவில்லை. இவ்வாறு நிரம்பாத கல்லூரிகள் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் என்பது, சேர்க்கை முடிவில் தெரியவந்திருக்கிறது. 

10ம் வகுப்பு சான்றிதழ் இன்று வினியோகம்

         பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு, இன்று முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கு, இந்த ஆண்டு முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive