NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நேர்காணல் முடிந்து ஓராண்டு ஆகியும் இளநிலை வரை தொழில் அலுவலர் பணி நியமனத்தில் தாமதம்.

       நேர்காணல் முடிந்து ஓராண்டான நிலையில் 182 இளநிலை வரை தொழில் அலுவலர் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பணம் கொடுத்தவர்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
 
         தமிழக நெடுஞ்சாலைத் துறையில் இளநிலை வரை தொழில் அலுவலர் (ஜேடிஓ) பணிக்கான 182 காலியிடங்களை நேரடி நியமனம் முறையில் நிரப்ப முடிவு செய்தது. இதற்கானவிளம்பரம் கடந்த 2015 ஆண்டு நவம்பரில் வெளியானது. இதற்கான நேர்காணல் கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் கடந்தாண்டு ஜனவரி 18ம் தேதி துவங்கியது.நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களிடம் இருந்து வேலை வாங்கித் தருகிறேன் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளில் சிலர் ரூ.10 லட்சம் வரை பேரம் பேசி 500க்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. மொத்தம் 182 இடம் காலியாக உள்ள நிலையில் 500க்கும் மேற்பட்டவர்களிடம் பணம் பெற்றதால்பிரச்னை எழுந்தது.
இதை தொடர்ந்து வேலைக்கான லஞ்சப்பணம் 10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்ந்தது. இதற்கு சம்மதம் தெரிவிக்காதவர்கள் அளித்த பணத்தை திருப்பி அளித்தனர். இறுதியாக ரூ.15 லட்சம் கொடுத்த 182 பேருக்கு வேலையை உறுதி செய்தனர்.  இந்த நிலையில், முதலில் 10 லட்சம் கொடுத்தவர்கள் வேலை மற்றும் பணம் கிடைக்காத கோபத்தில் நெடுஞ்சாலை துறை அலுவலகத்துக்கு வந்து பணம் வாங்கிய அதிகாரிகளை நெருக்கினர். இந்த விவகாரம் பெரிய அளவில் பிரச்னை ஏற்படுத்தியதால் பணி நியமனம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.

 இந்த நிலையில் நேர்காணல் முடிந்து ஓராண்டான நிலையில், தற்போது வரை முடிவை அறிவிக்காமல் நெடுஞ்சாலைத்துறை இழுத்தடித்து வருகிறது. இதனால், ரூ.15 லட்சம் வரை பணம் கொடுத்தவர்கள் தங்களது பெற்றோருடன் தினமும் கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகத்தை சுற்றி வருகின்றனர். அவர்களிடம் அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வருகின்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive