Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Today Rasipalan 26.2.2017

மேஷம்
உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். 
 
        நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வானன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
ரிஷபம்
தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
மிதுனம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். உறவினர்கள் உதவுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
கடகம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
சிம்மம்
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
கன்னி
எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
துலாம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் அன்புத் தொல்லை குறையும். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
விருச்சிகம்
எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். தாயாருடன் மோதல்கள் வரக்கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
தனுசு
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
மகரம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
கும்பம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
மீனம்
திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive