Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

ஓர்ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று மாணவர்கள் நினைக்கின்ற கருத்து...!!

1. எங்களை *அடிக்க* கூடாது.

2. எங்களுக்கு *பாடம்* நன்றாக சொல்லித் தர வேண்டும்.

3. வகுப்பறையை *மகிழ்ச்சியாக* வைத்துக் கொள்ள வேண்டும்.

4. நல்ல *பண்புடைய* நபராக இருக்க வேண்டும்.

5. எங்கள் *வகுப்பறையிலேயே* இருக்க வேண்டும்.


6. புது புது நற்-*கதைகள்* சொல்ல வேண்டும்.

7. புது புது *பாட்டுகள்* சொல்லி தர வேண்டும்.

8. *அன்பாக* இருக்க வேண்டும்.

9. நண்பர்களோடு *விளையாட* அனுமதிக்க  வேண்டும்.

10. எங்கள் ஆசிரியர் எந்த *தவறும்* பண்ணக்கூடாது.

11. பிற ஆசிரியர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்; பிற ஆசிரியர்களுக்கு முன் உதாரணமாக விளங்க வேண்டும்.

12. எங்களோடு *மகிழ்ச்சியாக* கலந்துரையாட வேண்டும்.

13. வகுப்பறையில் *தொலைபேசியில்* பேசக் கூடாது.

14. எங்களை *சுற்றுலாவுக்கு* கூட்டிச் செல்ல வேண்டும்.

15. எங்கள் ஆசிரியர் எல்லாரிடமும் *பணிவுடன்* நடந்து கொள்ள வேண்டும்.

16. எங்களுக்கு நல்ல *பழக்க-வழக்கங்களை* சொல்லிக் கொடுக்க வேண்டும்.

17. எங்களை *தூய்மையாக* இருக்க பழக்கப்படுத்த வேண்டும்.

18. எங்கள் மேல் *அக்கரையுடன்* இருக்க வேண்டும்.

19. எங்களை *புரிந்து* கொள்ள வேண்டும்.

20. எங்களை *பாதுகாக்க* வேண்டும்.

21. எங்கள் ஆசிரியர் *எங்களைப்போல* (குழந்தையை போல) இருக்க வேண்டும்.

22. எங்களை *திட்ட* கூடாது.

23. எங்களை *அமைதிப்படுத்த*
வேண்டும்.

24. எங்கள் பெற்றோரிடம் *அன்பாக* பேச வேண்டும்.

25. பள்ளியில் *விளையாட்டு*  ஆசிரியராகவும் இருக்க வேண்டும்.

26. எங்கள் ஆசிரியருக்கு *கெட்ட-பழக்கம்* இருக்க கூடாது.

27. பாடம் நடத்தும் போது *செல்லில்* பேசிக் கொண்டே வெளியே போக கூடாது.

28. அவர் *நல்லாசிரியர்* என்ற பட்டம் வாங்க வேண்டும்

29. அவர் *நற்சிந்தனை* உடையவராக இருக்க வேண்டும்.

30. அவருக்கு *நாங்க கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் தெரிந்தவராக* இருக்க வேண்டும்.

மாணவர்கள் விரும்பும் நல்லாசிரியர்களாக *நாம்* இருக்க முயற்சி மேற்கொள்வோம்...




2 Comments:

  1. இதை எல்லாம் ஆசிரியர்கள் தாமாகவே முன் வந்து செய்தாலும்,நாங்கள் எதிர்பார்க்கும் நற்பண்புகள் மற்றும் முழுமையான தேர்ச்சி விழுக்காடு கிடைப்பதில்லை என்பதை என்னும் போது வருத்தமாக இருக்கின்றது.

    ReplyDelete
  2. Naam idhai ellam seiyya ninaithalum adhai (students) seiyya viduvadhillai

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive