Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கரும்பலகை காட்டில் ஓர் ஆசிரியர் ! -Blackboard Jungle.

நகரின் பின்தங்கிய பகுதியில் ஒரு பள்ளி. போதை, வன்முறையில் தோய்ந்த வளரிளம்பருவ மாணவர்கள். கல்வியில் ஒரு மாற்றமாக பாடங்களுடன் தொழிற்கல்வியும் கற்பிக்கப்பட்ட காலம். 



கற்பித்தலில் ஆர்வமுடன் புதிய ஆசிரியர் வருகிறார். டேடியே என்பது அவர் பெயர். மாணவர்களின் ஒழுங்கீனச்செயல்கள் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது‌. தலைமையாசிரியர் முதல் மூத்த ஆசிரியர்கள் அனைவருமே அவர் கூறுவதை ஏற்காமல் மாணவர்கள் அமைதியானவர்கள் என்று கூறுகின்றனர்.

வகுப்பிற்குப் போ. மாணவர்களைப் பார்த்து நின்று பாடம் நடத்திவிட்டு வந்துவிடு. அவர்களுக்கு உன் முதுகைக் காட்டிவிடாதே. வேறு எதையும் கவனிக்காதே. என்பது மூத்த ஆசிரியரின் அறிவுரை.

ஆசிரியர் மீது எதையாவது எறிவது, அவரின் பொருட்களை உடைத்தெறிந்து, பெண் ஆசிரியரை மானபங்கம் செய்ய முயல்வது என்று மாணவர்களின் செயல்கள் அனைத்துமே வன்முறையின் உச்சம். இருந்தாலும் தொடர்ந்த முயற்சியால் மாணவர் மனங்களை மாற்ற முடியும் என்று டேடியே நம்புகிறார்.

ஆசிரியருக்கு வேறு தொடர்பு இருக்கிறது என்று அவர் மனைவிக்குக் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. பார்த்து எழுதக்கூடாது என்று எச்சரிக்கும் போது ஒரு மாணவர் கத்தியைக்காட்டி மிரட்டுகிறார்.
கத்தியைப் பறிக்கும் போராட்டத்தில் ஆசிரியரின் கையில் வெட்டுக்காயம் ஏற்படுகிறது. சிறிய கண்டிப்புடன் அவனையும் அவனது நண்பரையும் ஆசிரியர் மன்னிக்கிறார். மாணவர்களிடையே மாற்றம் மலர்கிறது.

வகுப்பறை ஒரு வித்தியாசமான போர்க்களம். குழந்தைகளின் வயதுக்கேற்ற சேட்டைகளைச் செய்கிறார்கள். ஆசிரியர் தமது பக்குவத்திற்கேற்ப செயல்படவேண்டும். மாற்றம் என்பது நொடியில் மலர்வதல்ல. தொடர்ந்த முயற்சியின் கனி என்பதைச் சொல்லும் படம்
கரும்பலகைக்காடு.
Blackboard Jungle.

முக்கியக் குறிப்பு.
இந்தப்படம் வெளியான  ஆண்டு 1955.

- கலகல வகுப்பறை சிவா




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive