Printfriendly

www.Padasalai.Net

Padasalai's WhatsApp Service!

பாடசாலை வலைதளத்தின் செய்திகள் தங்கள் Whatsapp குழுவில் இடம் பெற 94864 09189 Number ஐ இணைக்கவும்.

Join Now!

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

Today Rasipalan 30.3.2018

மேஷம் குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்&பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:மயில் நீலம்,ப்ரவுன்

ரிஷபம் நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்துப் போகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டாகும். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே,பச்சை  

மிதுனம் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் இதமாகப் பேசி வேலை வாங்குவீர்கள். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:பிங்க்,க்ரீம் வெள்ளை 

கடகம் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:பிஸ்தா பச்சை,மஞ்சள்  

சிம்மம் நண்பகல்12.43 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். பிற்பகல் முதல் மகிழ்ச்சி தொடங்கும். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:மெரூண்,வெள்ளை 

கன்னி குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உடல் அசதி, சோர்வு வந்து விலகும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பகல் 12.43 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:மயில்நீலம்,பிங்க்  

துலாம் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:ஆலிவ்பச்சை,ரோஸ் 

விருச்சிகம் தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமாகப் பேசுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:இளஞ்சிவப்பு,க்ரீம்வெள்ளை

தனுசு சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:அடர்சிவப்பு,கிரே  

மகரம் நண்பகல் 12.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. சொந்த&பந்தங்களால் அன்புத் தொல்லை உண்டு. பண விஷயத்தில் கறாராக இருங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். வியாபாரத்தில் பற்றுவரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். பிற்பகல் முதல் தடைகள் உடைபடும் அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ்,வைலெட் 

கும்பம் குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். நண்பகல் 12.43 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,ஊதா  

மீனம் அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு,பிங்க்

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...


Follow by Email

 

Tamil Writer

Most Reading