++ நாட்டின் மிகப் பெரிய முதல் பூச்சி அருங்காட்சியகம்! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 22,122 இனங்களைச் சேர்ந்த 84 ஆயிரம் பூச்சிகளின் பதப்படுத்தப்பட்ட மாதிரிகள்,
பூச்சிகள் இடம்பெற்ற நாட்டின் மிகப் பெரிய பூச்சி அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச் 26) திறந்துவைத்தார்.


ஐந்து கோடி ரூபாய் செலவில் 6,691 சதுரடி பரப்பளவில் இந்தப் பூச்சி அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் 22,122 இனங்களைச் சேர்ந்த 84 ஆயிரம் பூச்சிகளின் பதப்படுத்தப்பட்ட மாதிரிகள், பூச்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தில் இந்தியா மட்டுமின்றி, பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான பூச்சி இனங்களும், ஒட்டுண்ணிகளும் மக்கள் பார்வைக்குக் கண்ணாடிக் கூண்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்தப் பூச்சிகளின் அருகே அதன் மேல்புறம் உள்ள எல்இடி திரையில், அந்தப் பூச்சிகளின் வகை, அவற்றின் நன்மை தீமைகள், அவை எந்த நாட்டைச் சேர்ந்தவை போன்ற விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், பூச்சிகளுக்காக வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள், நாணயங்கள், அதை வெளியிட்ட நாடுகள், பூச்சிகள் குறித்து உலக அளவில் வெளிவந்திருக்கும் நூல்கள், தோண்டி எடுக்கப்பட்ட இரண்டு பெரிய கரையான் புற்றுகள் உள்ளிட்டவை இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வெளி வாயிலில் தேனீக்கள் வளர்க்கும் பண்ணையும் உருவாக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...