ரயிலில் பெண்கள் பாதுகாப்புக்கு அவசர எண் '182' அறிமுகம்

ரயிலில் பெண்கள் பாதுகாப்பு குறித்த அவசர அழைப்புக்காக, புதிய அலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சார்பில், பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம், கோவை ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயிலில் நேற்று நடந்தது. ஈவ் டீசிங், அத்துமீறி செயல்படுதல், திருட்டு, சந்தேக நபர்கள் நடமாட்டம் குறித்த அவசர
அழைப்புக்கு, 182 என்ற புதிய அலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டது.
பெண்கள் பாதுகாப்புக்கு, '182' என்ற அவசர எண்ணில் அழைக்கலாம். ரயிலில் பயணிக்கும் போது பெண்கள் பாதுகாப்பில் குறைபாடு இருந்தால் உடனடியாக தெரிவிக்கலாம். இதற்காக ரயில்வே ஸ்டேஷனில், 24 மணி நேரமும் இரண்டு பெண் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Share this

0 Comment to " ரயிலில் பெண்கள் பாதுகாப்புக்கு அவசர எண் '182' அறிமுகம்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...