NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பயனர்களுக்கே தெரியாமல் சேமித்து வைத்து வருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் மீது குற்றச்சாட்டு

ஃபேஸ்புக்கில் உங்கள் தகவல்களைக் காண!


ஃபேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தகவல்களை பயனர்களுக்கே தெரியாமல் சேமித்து வைத்து வருவதாக சமீபத்தில் வெளியான தகவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை, பயனர்களுக்கே தெரியாமல் சேமிப்பதாக சமீபத்தில் கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியகம் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதனால் ஃபேஸ்புக் பயனர்கள் மத்தியில் பெரும் அச்சம் தோன்றியுள்ளது. ஆன்ட்ராய்டு பயனர்களின் அழைப்பு வரலாறுகள் மற்றும் குறுஞ்செய்திகளை ஃபேஸ்புக் நிறுவனம் உளவு பார்ப்பதாக வெளியான தகவல்களால் அந்நிறுவனம் சுமார் ரூ.100 கோடி ரூபாய் சரிவினை கடந்த 10 நாட்களில் சந்தித்துள்ளது.

ஆன்ட்ராய்டு பயனர்கள் ஃபேஸ்புக்கில் பதிவாகி உள்ள அவர்களது தகவல்களை தெரிந்து கொள்ள ஃபேஸ்புக் நிறுவனத்தில் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கில் உள்ள செட்டிங்கிற்குள் சென்று, அதில் ஜெனரல் செட்டிங் என்ற வசதியை கிளிக் செய்து, Download a copy of your Facebook data என்ற வசதியை தேர்வு செய்தால் அதன் மூலம் பயனர்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தால் சேமிக்கப்பட்ட அவர்களின் தகவல்களை காணலாம். பெரும்பாலும் அதில் பயனர்கள் ஃபேஸ்புக்கில் பயன்படுத்திய தகவல்களே தோன்றினாலும், சில பயனர்கள் ஃபேஸ்புக் அப்ளிகேஷனிற்கு அனைத்து உரிமைகளையும் வழங்கி இருந்தால் அவர்களின் மொபைல் டேட்டாக்களும் பதிவாகி இருக்கும்.

ஒரு அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யும் பொழுது அதில் கேட்கும் பல்வேறு உரிமைகளுக்கும் பயனர்கள் சரி என கிளிக் செய்த பின்னரே அவை சரியே வேலை செய்யத் தொடங்குகிறது. ஆனால் அதனால் தகவல்கள் பாதுகாப்பாக இல்லை என்ற பட்சத்தில் அவ்வாறான அப்ளிகேஷன்களை பயன்படுத்த பயனர்கள் இனி சிறு தயக்கம் காண்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தீர்வினை கூகுள் நிறுவனமும், மற்ற முக்கிய சமூக வலைதளங்களும் மேற்கொள்ள வேண்டும் என்பதே பயனர்களின் ஒரே வேண்டுகோளாக உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive