NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிராட்பேண்ட் வேகம் : இந்தியா முன்னேற்றம்!

சர்வதேச அளவிலான இணைய வேகம் குறித்து ஒக்லா நிறுவனம் நடத்திய ஆய்வில் பிராட்பேண்ட் இன்டர்நெட் வேகத்தின் அடிப்படையில் இந்தியா 67வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

உலக அளவில் இணைய வேகம் அதிகம் கொண்ட நாடுகளின் தரவரிசைப் பட்டியலை ஓக்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிராட்பேண்ட் இன்டர்நெட் மற்றும் மொபைல் இன்டர்நெட் என இரு பிரிவுகளில் இந்தப் பட்டியல் உள்ளது. இதில், பிராட்பேண்ட் வேகத்தின் அடிப்படையில் இந்தியா 67வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் சராசரி பிராட்பேண்ட் இன்டர்நெட் வேகம் 20.72 Mbps ஆகும். கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இந்தியா 76வது இடத்தில் இருந்தது.

மொபைல் இன்டர்நெட் வேகத்தின் அடிப்படையில் இந்தியா கடந்த ஆண்டை விட சற்று பின்தங்கியுள்ளது. சராசரியாக 9.01 Mbps வேகத்தில் மொபைல் இன்டர்நெட் சேவை வழங்கும் இந்தியா 109வது இடத்தில் இருக்கிறது. ஆனால், மொபைல் இன்டர்நெட் வேகம் கடந்த ஆண்டைவிட சற்று உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மொபைல் இன்டர்நெட் வேகம் 8.80 Mbps ஆக இருந்தது. இதே போல மொபைல் இன்டர்நெட் அப்லோட் வேகத்திலும் இந்தியா 3.66 Mbps என்ற நிலையிலேயே உள்ளது.

மொபைல் இன்டர்நெட் வேகத்தின் பட்டியலில் 62.07 Mbps வேகத்துடன் நார்வேயும், பிராட்பேண்ட் வேகத்தின் பட்டியலில் 161.53 Mbps வேகத்துடன் சிங்கப்பூரும் முதலிடத்தில் உள்ளன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive