NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 3.3.2018

03.03.2018
 மேஷம்
பிள்ளைகளின் செயல்பாட்டால் இலாபம் உண்டாகும்.
பழைய நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். மூத்த உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் சம்பந்தமான புதிய நுணுக்கங்களை கற்பீர்கள். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
அசுவினி : இலாபம் உண்டாகும்.
பரணி : ஆதரவு கிடைக்கும்.
கிருத்திகை : புதிய நுணுக்கங்களை கற்பீர்கள்.
 ரிஷபம்
மனை சம்பந்தமான தொழில் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். வாகனப் பயணங்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். தாயின் ஆதரவால் சாதகமான சூழல் அமையும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : முயற்சிகள் ஈடேறும்.
ரோகிணி : ஆசிர்வாதம் கிடைக்கும்.
மிருகசீரிடம் : நினைவாற்றல் மேலோங்கும்.
 மிதுனம்
பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் மரியாதை உயரும். சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். இளைய சகோதரர்களிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிடம் : மதிப்பு உயரும்.
திருவாதிரை : உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
புனர்பூசம் : அனுகூலமான நாள்.
 கடகம்
மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சில காலதாமதம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : மாற்றமான நாள்.
பூசம் : செயல்பாடுகளில் கவனம் தேவை.
ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
 சிம்மம்
திருமண வரன் தேடுபவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பால் தனலாபம் அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் சரியாகும். சபைகளில் ஆதரவு பெருகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : சுப செய்திகள் கிடைக்கும்.
பூரம் : பேச்சுகளால் இலாபம் உண்டாகும்.
உத்திரம் : குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.
 கன்னி
புதிய எண்ணங்களாலும், சாதகமான முயற்சியாலும் பொருட்சேர்க்கை உண்டாகும். தனலாபம் உண்டாகும். பங்காளிகளுக்கு இடையேயான உறவு நிலை மேம்படும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். நினைவாற்றல் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : செயல்பாடுகளில் கவனம் தேவை.
அஸ்தம் : ஜெயம் உண்டாகும்.
சித்திரை : உறவு நிலை மேம்படும்.
 துலாம்
பூர்வீக சொத்துகளில் இடர்பாடுகள் தோன்றி மறையும். தொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் புதிய யுக்திகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். இளைய சகோதரர்களால் சுப விரயம் உண்டாகும். வெளிநாட்டு முயற்சிகளில் எண்ணிய பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : பொருட்சேர்க்கை உண்டாகும்.
சுவாதி : காரிய வெற்றி கிடைக்கும்.
விசாகம் : ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
 விருச்சகம்
இசைக்கலைஞர்களுக்கு சாதகமான நாள். திடீர் யோகத்தால் எதிர்பாராத பலன் கிடைக்கும். மனக்கவலைகள் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். இணையதள வேலை வாய்ப்புகளினால் மேன்மை உண்டாகும். புதிய வீடு கட்டும் பணிகளை தொடங்குவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
விசாகம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அனுஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.
கேட்டை : பயணங்களால் நன்மை உண்டாகும்.
தனுசு
காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் நட்பால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். சக பணியாளர்களால் தொழிலில் சாதகமான சூழல் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : புகழ் உண்டாகும்.
பூராடம் : தொழில் அபிவிருத்தி உண்டாகும்.
உத்திராடம் : அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.
 மகரம்
குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் நீங்கி அமைதி உண்டாகும். தர்ம ஸ்தாபனங்களின் உதவிகளால் நிர்வாகிகளுக்கு பெருமை கிடைக்கும். மறைபொருள் சம்பந்தமான ஞானத்தேடல் உண்டாகும். நண்பர்களிடம் உரையாடும்போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
உத்திராடம் : தேடல் பிறக்கும்.
திருவோணம் : பொறுமையுடன் செயல்படவும்.
அவிட்டம் : இன்னல்கள் மறையும்.
 கும்பம்
சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடனும், பொறுமையுடனும் செயல்பட வேண்டும். திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சுப செய்திகள் வரும். பிறருக்கு உதவும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்
அவிட்டம் : அமைதி தேவை.
சதயம் : செயல்களில் கவனம் தேவை.
பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
 மீனம்
பொது நலத்திற்காக நன்கொடைகளை அளிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கான மருத்துவ செலவுகள் உண்டாகலாம். பூஜை புனஸ்காரங்களில் மனம் ஈடுபடும். உயர் அதிகாரிகளுடன் சிநேகிதம் உண்டாகும். திருமண வரன்கள் அமையும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரட்டாதி : புதிய நட்பு கிடைக்கும்.
ரேவதி : பதவி உயர்வு கிடைக்கும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive