சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழுள்ள மேலும் 30 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்க மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
சென்னை மாநகராட்சியின் மன்றக் கூட்டம் ஏப்ரல் 18-ம் தேதி நடக்கிறது. மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் இயங்கும் 4 சமுதாயக் கல்லூரிகளில் வேலை வாய்ப்பு தரும் பயிற்சி அளிக்கத் தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்குவது, 30 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை விரிவாக்குவது, மாநகராட்சிப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்துவது, மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 5,690 முதியவர்களுக்கும், 1,438 மாற்றுத் திறனாளிகளுக்கும் ஓய்வூதியம் வழங்குவது, வறுமைக்கோட்டு எண் வழங்குவது, நுங்கம்பாக்கம் லேக் ஏரியா 4-வது குறுக்குத் தெருவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பழுதடைந்து செப்பனிட முடியாத நிலையில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தை இடிப்பது, அதே பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் பயன்படாத நிலையில் உள்ள ஆய்வகக் கட்டடம், வகுப்பறைகளை இடிப்பது, ஜோதியம்மாள் நகரில் பெண்களுக்கான உபயோகப்படாத கழிப்பறையை இடிப்பது, அதே பகுதியில் உபயோகிக்க முடியாத நிலையில் உள்ள ஆண்கள் கழிப்பிடத்தை இடிப்பது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
» சென்னை 30 மாநகராட்சி தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி






