Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டெங்கு காய்ச்சல் – வருமுன் காக்க வழிகள் – தடுப்பு முறைகள்


டெங்கு காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது...?
  டெங்கு காய்ச்சல் டெங்கு 1,2,3,4 என நான்கு வகை வைரஸ்களால் ஏற்படும் காய்ச்சல் ஆகும். ஏடிஸ் எஜிப்டை என்ற வகை கொசுக்களினால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. அவை மலேரியாவைப் பரப்பும் கொசுக்களிலிருந்து மாறுபட்டவை. அவை பொதுவாக பகலில் மட்டுமே கடிக்கின்றன. 
 click here for pledge-நாம் இந்த உறுதிமொழியை தினம் மாணவர்களை படிக்கவைத்து விழிப்புணர்வை கொஞ்சம்  ஏற்படுத்தலாமே!...

   பிடித்து வைத்துள்ள நீரில் அவை உண்டாகிப் பெருகுகின்றன. டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவரை இந்த வகை கொசு கடிக்குபோது வைரஸ் அதன் உடலுக்குள் செல்கிறது. அந்தக் கொசு நலமாயுள்ள ஒருவரைக் கடிக்கும்போது வைரஸ் அவரது உடலுக்குள் புகுந்து டெங்கு காய்ச்சலை உண்டாக்குகிறது.இந்நோய் பரவுகிறது, ஆனால் இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடித்தொடுகை மூலம் பரவுவதில்லை. நோய் பாதித்தவரைக் கடித்த (குத்திய) கொசு மற்றொருவரை கடிப்பதன் மூலம் இந்நோய் பரவுகிறது, சில சந்தர்ப்பங்களில் குருதி மாற்றீடு மூலமும் பரவலாம். இக்கொசுக்கள் பொதுவாக பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. பொதுவாக விடியற்காலையிலும் பிற்பகலிலும் இக்கொசு கடிக்கின்றது. இது உயிர் ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோயாகையால் என்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன..?

  • டெங்கு காய்ச்சல் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் பாதிக்கும். திடீரென்று அதிகமான காய்ச்சல்,
  • தலைவலி,
  • உடம்பில் தற்காலிகமாக தோல் பாதிப்பு,
  • தொண்டைவலி,
  • கண் வலி,
  • இருமல் ஆகியவை முதல் அறிகுறிகளாகத் தோன்றுகின்றன.
  • கடுமையான உடல்வலி,
  • பசியின்மை குமட்டல், வாந்தியும் ஏற்படக்கூடும்,
  • சாதாரண இன்ஃபுளூயன்சா காய்ச்சல் மாதிரி இருந்து 4 அல்லது 6 நாட்களில் காய்ச்சல் குறைந்து உடம்பு முழுவதும் பொறிப்பொறியாக காணப்படலாம்.
  • கடுமையான வலி ஏற்படுவதால் இதை எலும்புடைக்காய்ச்சல் என்றும் அழைக்கிறார்கள்.


மற்றொரு வகை மிகவும் தீவிரமானது. இதை டெங்கு இரத்த ஒழுக்கு காய்ச்சல் (Dengue hemorrhagic fever அல்லது Dengue shock syndrome) என்றும் அழைக்கப்படுகிறது.
    • நல்ல காய்ச்சல்
    • தீவிர கண்வலி (கண்ணிற்குப் பின்)
    • கடும் தலைவலி
    • கடுமையான மூட்டு மற்றும் தசை வலி
    • வாந்தி
    • தோல் சிவத்தல் (rash)
    • வெள்ளை அணுக்கள், இரத்தவட்டுகள் குறைதல்
    • மிதமான இரத்தப்போக்கு வெளிப்பாடு (மூக்கில் இரத்தப்போக்கு, இரத்தப்புள்ளிகள் -- petechiae)
    • அடி முட்டிகளில் பொதுவாகவும், சிலருக்கு உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம்

நான்கு நிலைகள்

  • அறிகுறிகள் இல்லாத காய்ச்சல் நிலை
  • ஆரம்ப நிலை டெங்குக் காய்ச்சல் நிலை
  • இரத்தப் பெருக்குடன் கூடிய டெங்கிக் காய்ச்சல் நிலை
  • டெங்கு அதிர்ச்சி அறிகுறி நிலை
தவிற்க்கும் வழிகள்
  • டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் ஏற்படுவதை தவிர்க்க வீடுகளை சுற்றி மழை நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும்.
  • காய்ச்சிய குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும்.
  • யாருக்காவது காய்ச்சல் தொடர்ந்து மூன்று நாட்கள் இருந்தால் உடனடியாக தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு லேசான காய்ச்சல் இருந்தாலும் தாமதம் செய்யாமல் டாக்டர்களிடம் காட்டவேண்டும்.
  • மருத்துவ முறை

    நோய்க்கான குறிப்பிட்ட மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் பெரும்பாலும் இந்நோய் இரண்டு வாரங்களில் குணமாகி விடுகிறது. நல்ல ஓய்வு, நிறைய நீர்ம உணவு உட்கொள்ளுதல், காய்ச்சலுக்குத் தகுந்த மருந்து உட்கொள்தல் போன்றவை நோயின் கடுமையைக் குறைக்க உதவும். மருத்துவமனையில் செய்யும் சிரைமூல நீர்ம ஈடு, குருதிப்பரிமாற்றம் போன்றவை நோயைக் கட்டுப்படுத்துகின்றது. மருத்துவமனையில் அனுமதிக்கலாமா இல்லையா என்பது ‘எச்சரிக்கைக் குறிகளை’ வைத்துத் தீர்மானிக்கப்படுகின்றது.
    காய்ச்சலுக்கு பரசிட்டமோல் பயன்படுத்தப்படுகின்றது. அஸ்பிரின், இயக்க ஊக்கி மருந்துகள் (corticosteroids), அழற்சிக்கு எதிரான இசுட்டீரோய்டு இல்லாத மருந்துகள் அறவே பயன்படுத்தல் கூடாது, ஏனெனில் இவை குருதிப்போக்கை மேலும் மிகையாக்கிவிடும். மேலும் தசை வழியே ஊசி போடுதல் போன்ற குருதிப்பெருக்கை ஏற்படுத்தவல்ல மருத்துவ முறைகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
    நோயின் மீள் நிலைப் பருவத்தில் சிரைவழியான நீர்மம் செலுத்துதல் நிறுத்தல் அவசியமாகின்றது, ஏனெனில் இப்பருவத்தில் நீர்ம அதிகரிப்பு நிலை உண்டாகும்.

    வரலாறு

    டெங்குவாக இருக்கக்கூடிய காய்ச்சல் நோய் ஒன்று முதன்முதலில் சீன மருத்துவ அறிகுறிகள் என்சைகிளோபீடியாவில் சின் பேரரசுக் காலத்தில் (265 – 420 கி.பி) பதிவு செய்யப்பட்டுள்ளது. பறக்கும் பூச்சிகளுடன் தொடர்புடைய நீர் நச்சுமையால் இது ஏற்பட்டுள்ளதாக அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
    டெங்குவாக கருதக்கூடிய காய்ச்சலுடன் கூடிய பரந்த தொற்று நிகழ்வு ஒன்று முதன்முதலில் 1635இல் மேற்கிந்தியத்தீவுகளில் நடந்ததாகப் பதியப்பட்டுள்ளது.
    1779-1780 ஆண்டுப் பகுதியில் முதலாவது டெங்கு என உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நிகழ்வு ஆசியா, வட அமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் ஏறத்தாழ ஒரே நேரத்தில் நிகழ்ந்தது. 1789 இல் அமெரிக்க மருத்துவர் பெஞ்சமின் ரஷ் 1780 ஆம் ஆண்டு பிலாடெல்பியாவில் நிகழ்ந்திருக்கக்கூடிய டெங்கு தொற்று நிகழ்வு பற்றிக் குறிப்பிட்டுள்ளார், இவர் அதன் அறிகுறிகளை வைத்து ‘எலும்பு முறிப்பு நோய்’ என்று பெயரிட்டார்.
    1820 இன் முற்பகுதிகளில் கிழக்கு ஆப்பிரிக்காவில் டெங்குவாக இருக்கக்கூடிய தொற்று நிகழ்வு நிகழ்ந்தது. இதனை சுவாகிலி மொழியில் கெட்ட ஆவியால் திடீரென உண்டாகும் எனப் பொருள்படும் ‘கி டெங்கா பெபோ’ (ki denga pepo) என்று அழைத்தனர். 1827-28 இல் கரிபியனில் நிகழ்ந்த தொற்று நிகழ்வின் பின்னர் இசுப்பானிய கரிபியர்களால் டெங்கு என அழைக்கப்பட்டது. 1906 இல் ஏடிசுக் கொசுவால் இது காவப்படுகின்றது என்பது அறியப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் பெரும்படியான தொற்று நிகழ்வுகள் நிகழ்ந்தன.

    ஆராய்ச்சிகள்

    டெங்கு நோயைத் தடுக்க அல்லது ஒழிக்க பல ஆராய்ச்சிகள் உலகின் பல பாகங்களிலும் செய்யப்பட்டு வருகின்றன. நோய்க்காவிகளின் கட்டுப்பாடு, தீநுண்மத்துக்கான (வைரசுக்கான) தடுப்பு மருந்து உருவாக்கம், வைரசுக்கெதிரான மருந்துகள் கண்டுபிடிப்பு என பல வழிகளிலும் ஆராய்ச்சியாளர்கள் தமது முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
    கப்பி (guppy) எனும் ஒருவகை மீன்வகைகளை தேங்கிக் கிடக்கும் நீர்நிலைகளில் வளர்ப்பது, அவை கொசுக்களின் குடம்பிகளைத் தின்னுவது மூலம் கொசுக்களின் இனவிருத்தி கட்டுப்படுத்தப்படுகின்றது. இம்முயற்சி ஓரளவு வெற்றியைத் தந்துள்ளது என அறியப்படுகின்றது.




Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive