Home »
» பள்ளி, கோவில்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற முடிவு: மூடப்படும் மதுக்கடைகள் கணக்கெடுப்பு; விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
தமிழகம் முழுவதும் 6,800 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வந்தன.படிப்படியாக
மதுவிலக்கு
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல்
அறிக்கையில், ‘‘நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு
அமல்படுத்தப்படும்’’ என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறி
இருந்தார்.
அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று 6–வது முறையாக தமிழக
முதல்–அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற அன்று, 5 கோப்புகளில்
கையெழுத்திட்டார். அதில் ஒன்று, மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை 2 மணி நேரம்
குறைப்பது மற்றும் 500 மதுக்கடைகளை மூடுவது என்பதாகும்.500 டாஸ்மாக்
கடைகள் மூடல்
இதன் அடிப்படையில், காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கி வந்த
டாஸ்மாக் மதுக்கடைகள், மே மாதம் 24–ந் தேதி முதல் மதியம் 12 மணி முதல் இரவு
10 மணி வரை என்று விற்பனை நேரம் 2 மணி நேரம் குறைக்கப்பட்டது.அதனை
தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 19–ந் தேதி முதல் கட்டமாக சென்னை
மண்டலத்தில் 58 மதுக்கடைகளும், கோவை மண்டலத்தில் 60 மதுக்கடைகள், மதுரை
மண்டலத்தில் 201 மதுக்கடைகள், திருச்சி மண்டலத்தில் 133 மதுக்கடைகள், சேலம்
மண்டலத்தில் 48 மதுக்கடைகள் என மொத்தம் 500 டாஸ்மாக் கடைகள்
மூடப்பட்டன.கணக்கெடுப்பு பணி
முதல்–அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் தான் கூறியது போன்றே
படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.இந்த
நிலையில் 2–ம் கட்டமாக எந்தெந்த டாஸ்மாக் கடைகளை மூடலாம்? என்பது பற்றி
ஆய்வு செய்யும் பணியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.தற்போதைய நிலவரப்படி
தமிழகத்தில் 6 ஆயிரத்து 300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் கோவில்,
தேவாலயம், மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள்,
ஆஸ்பத்திரிகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவற்றின் அருகே உள்ள டாஸ்மாக்
கடைகளை அகற்றுவதற்காக, அவற்றை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.4 பேர்
கொண்ட குழு
இந்த பணிகள் விரைவாக நடைபெறுவதற்காக, மாவட்ட வாரியாக பிரித்து, அந்தந்த
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தாசில்தார், சர்வேயர் அந்தஸ்து உள்ள 2
அதிகாரிகள் மற்றும் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் இருந்து 2
அதிகாரிகள் என 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.இந்த குழுவினர்
தங்கள் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஆய்வு
செய்து வருகிறார்கள். ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.அறிக்கை
இதன் பின்னர் 4 பேர் கொண்ட குழுவினர் தாங்கள் மேற்கொண்ட பணி தொடர்பான
அறிக்கையை மாவட்ட நிர்வாகத்துக்கு அளிப்பார்கள். பின்னர் அங்கிருந்து தமிழக
அரசுக்கு அந்த அறிக்கை அனுப்பிவைக்கப்படும்.அதன் அடிப்படையில் பள்ளிகள்,
வழிபாட்டுதலங்கள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களின் அருகே உள்ள
மதுக்கடைகள் மூடப்படும் என தெரிகிறது. அதற்கான அறிவிப்பு விரைவில்
வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...