NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து 24-ந்தேதி முதல் 9 நாட்கள் விடுமுறை

பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து 24-ந்தேதி முதல் 9 நாட்கள் விடுமுறை 2-ந் தேதி முதல் விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு
|  பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து 24-ந்தேதி முதல் 9 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது.
பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2-ந்தேதி திறக்கப்படும் அன்றே மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. பாடப்புத்தகங்கள் மாணவர்களின் புத்தக சுமையை குறைப்பதற்காக அந்தந்த பருவத்திற்கான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 3-ம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஜனவரி 2-ந்தேதி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இப்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வுகள் 23-ந்தேதி முடிவடைந்து 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. ஜனவரி 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அன்றே மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.28-ந்தேதிக்குள் அனுப்ப ஏற்பாடு அதற்காக தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக தலைவர் மைதிலி ராஜேந்திரன் உத்தரவுப்படி செயலாளர் கார்மேகம் மற்றும் பாடநூல் கழக அலுவலர்கள் 60 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்க பாட நூல்கள், மற்றும் நோட்டு புத்தகங்களை அச்சடித்து அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறுகையில், அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அன்றே மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தங்களும், நோட்டுகளும் வழங்கப்பட உள்ளது. அதற்காக 28-ந்தேதிக்குள் மாவட்ட கல்வி அதிகாரிகள் அவைகளை பள்ளிகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive