டிஜிட்டல் மயமாகும் மருத்துவ சேவைகள்!!!

      அனைவருக்கும், தரமான மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட சேவைகள் கிடைக்கும் வகையில், மருத்துவ சேவையை டிஜிட்டல் மயமாக்கும் பணி வேகமாக நடந்து வருவதாக, மத்திய சுகாதாரத் துறை இணைஅமைச்சர், பாகன் சிங் குலஸ்தே தெரிவித்தார்.
லோக்சபாவில் நேற்று, பாகன் சிங் குலஸ்தே, எழுத்து மூலம் அளித்த பதில்:மருத்துவசேவை யில்,தகவல் தொழில்நுட்பத்தை அதிகஅளவில் பயன்படுத்தும் முயற்சி ஏற்கனவே துவங்கியுள்ளது.

இதனால், கிராமப் பகுதியில் உள்ளோருக்கும் தரமான சிகிச்சை கிடைக்கும்.

'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், மருத்துவத் துறையை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் வேக மாக நடந்து வருகின்றன. ஆன்லைன் மூலம் மருத் துவ ஆலோசனை, ஆன்லைனில் மருத்துவ தகவல் களை சேமிப்பது, மருந்துகள் உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலமாக வாங்குவது, நாடு முழுவதும், நோயாளிகளின் தகவல்களை ஆன்லைனில் பகிர்ந்து கொள்வது போன்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

டிஜிட்டல் மயமாகும் போது, நோயாளிகள் குறித்த தகவல்கள் இணையதளத்தில் சேமிக்கப் படுகின் றன. இதனால், ஒருவருடைய நோய் குறித்த முழு விபரங்களையும் அறிந்து கொள்ள முடியும். காகித பயன்பாடுஇல்லா முறையும் வருவதால், பல கோடி ரூபாயை சேமிக்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புற்றுநோய் அதிகரிப்பு :


கடந்த, 2013ல் 12.70 லட்சமாக இருந்த புற்று நோயாளிகளின் எண்ணிக்கை, 2016ல், 14.51 லட்சமாக உயர்ந்துள்ளது. புற்றுநோய்க்கு தரமான சிகிச்சை அளிக்கும் வகையில், நாடு முழுவதும், பல்வேறு இடங்களில் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் துவங்கப்பட்டு வருகின்றன.
ஆம்புலன்ஸ் சேவை :


ஆம்புலன்ஸ் சேவையை வலுப்படுத்தும் வகை யில், தேவையான தொழில்நுட்பம் மற்றும் நிதியை மத்திய அரசு

Share this

0 Comment to " டிஜிட்டல் மயமாகும் மருத்துவ சேவைகள்!!!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...