Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

செல்போன் பேட்டரி வெடிக்காமல் தடுக்க என்ன வழி?



ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் அதன் ஆபத்துகளும் அதிகரித்து வருகின்றது என்பது உண்மையே..! எவ்வாறு செல்போன் பேட்டரி வெடிக்காமல் தடுக்கலாம் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.

செல்போன் பேட்டரி

செல்போன் வெடிக்க போலி பேட்டரிகள் மிக முக்கிய காரணமாகும்.அதிக நேரம் மொபைலை சார்ஜ் செய்வது மிக தவறான நடவடிக்கைகளில் ஒன்றாகும்.சார்ஜ் ஏறும்பொழுது மொபைலை பயன்படுத்தாதீர்கள்.

செல்போன்களில் பயன்படுத்தப்படுகின்ற லித்தியம்-ஐயன் பேட்டரிகள் இருவிதமான ஆபத்து தரும் ஒன்று பேட்டரி உப்புதல் அல்லது வெடிக்கும் தன்மையை பெறும். இரண்டுக்குமே காரணம் தவறான பேட்டரி அனுகுமுறை மற்றும் பயன்பாடே ஆகும். எவ்வாறு தவிர்க்கலாம் ?

போலி பேட்டரி

குறைந்த விலையில் பேட்டரிகள் கிடைக்கும் ஒரே காரணத்தால் , போலியான பேட்டரிகளை தேர்ந்தெடுப்பதானால் உங்கள் மொபைலுக்கு என பிரத்யேகமான செயல்பாட்டை கொண்டிருக்காத இந்த மொபைல் பேட்டரிகள் வெடிக்கும் ஆபத்து அதிகமாகவே உள்ளது.

தரமற்ற சார்ஜ்ர்

தரமற்ற விலை குறைந்த சார்ஜர்களை பயன்படுத்தினால் அதிகப்படியான மின்சாரத்தை பேட்டரிக்குள் மிக வேகமாக செலுத்தும் பொழுது பேட்டரியின் உள்ளே அமைந்து செல்களில் பாதிப்பு ஏற்பட்டு வெடிக்கும் அபாயம் உள்ளது.



இரவு முழுவதும் சார்ஜ்

பகலில் அதிக நேரம் மொபைல்பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் இரவு முழுவதும் மொபைலை சார்ஜிங் செய்வதனால் அதிகப்படியான ஆபத்தை சந்திக்கின்றார்கள். எடுத்துக்காட்டுக்கு ஒரு குடத்தில் எவ்வளவு நீர் பிடிக்க முடியுமோ அதன் பிறகும் நீர் பிடித்தால் என்னவாகும், அது போன்றுதான் பேட்டரி சார்ஜிங் முறையும் என்னதான் நவீன பேட்டரிகளில் மிக விரைவான சார்ஜ் மற்றும் சார்ஜ் ஏறிய பின்னர் பேட்டரி மின்சாரத்தை எடுத்து கொள்ளாது என காரணம் கூறினாலும் அடிக்கடி மாறும் மின்சாரத்தின் வோல்டேஜ் மிகுந்த ஆபத்தை விளைவிக்கும்.

தலையனைக்கு அடியில் மொபைல்

சார்ஜ செய்து கொண்டே தலையனைக்குஅடியிலை ஸ்மார்ட்போன்களை வைத்து கொள்வதனை தவிர்ப்பது மிகவும் நல்லது.

அழைப்புகள் மட்டுமல்ல

சார்ஜ் செய்யும்பொழுது அழைப்புகளை மேற்கொள்வது தவிர்க்க வேண்டிய மிக முக்கிய அம்சமாகும்.  மேலும் இந்த சமயங்களில் ஹெட்போனில் பாட்டு மற்றும் படம் போன்றவற்றை பார்ப்பதனை தவிர்ப்பது நல்லதே ஆகும்.

தவிர்க்க வேண்டிய முக்கிய செயல்பாடுகள்

ஈரமாக உள்ள மொபைலை சார்ஜ் செய்யவே கூடாது.அதிக நேரம் பயன்படுத்தி பின்னர் பேட்டரி காலியான பிறகு மொபைல் சூடாக இருக்கும் சமயங்களில் உடனடியாக சார்ஜ் போடவே கூடாது.முழுமையாக மொபைலின் வெப்பம் குறைந்த பின்னரே சார்ஜ் செய்வதே நலம் தரும்.சார்ஜ் செய்யும் பொழுது நேரடி சூரிய ஒளி பாதிப்பில் இல்லாத வகையில் ஸ்மார்ட்போனை வைக்க வேண்டும்.மொபைலில் பயன்படுத்து கவர்கள் (Cases) தயாரிப்பாளரின் பரிந்துரையின் அடிப்படையிலே பயன்படுத்துவது அவசியம்.உப்பி நிலையில் உள்ள மின்கலனை உடனடியாக மாற்றிவிடுங்கள்.

ஒவ்வொரு வாகனத்திலும் கவனித்தது  உன்டா… தினமும் என்னை கவனி என மின்கலன் மீது எழுதியிருக்கும் வாசகத்தை நினைவில் கொள்ளுங்கள் உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரி மீது தினமும் கவனமாகவே பயன்படுத்துங்கள்..!





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive