Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வாய்ப்பும், வளர்ச்சியும் உள்ள துறைகளை தேர்வு செய்யுங்கள்! : ஜெயபிரகாஷ் காந்தி ஆலோசனை

மதுரை: 'உயர் கல்வியில் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளும், வளர்ச்சியும் உள்ள துறைகளை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்,' என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்தார்.
தினமலர் சார்பில் மதுரையில் நடக்கும் வழிகாட்டி நிகழ்ச்சியில் 'வேலை வாய்ப்பு ஆலோசனை' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:எதிர்காலத்தில் எந்த துறைகளில் வாய்ப்பு, வளர்ச்சி உள்ளதோ அந்த துறைகள் சார்ந்த படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்வதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.தற்போது இயந்திரமயமாதல் (ஆட்டோமேஷன்), புதிய கண்டுபிடிப்புகள், பாடத் திட்டங்கள் ஆகிய மூன்று சவால்களை மாணவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இயந்திரமயமாதலால் பலரது வேலைவாய்ப்பு பறிபோய் விடுகிறது. ஆராய்ச்சிகள் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.
கல்லுாரிகளில் தற்போதுள்ள பாடத் திட்டங்களுக்கும், தற்காலிக வளர்ச்சிக்கும் அதிக இடைவெளி உள்ளதால், படித்த உடன் வேலை என்பது கனவாகிறது. படிப்புகளை தேர்வு செய்வதை விட அனைத்து வசதிகளும், பாடத் திட்டத்தை தாண்டி விஷயங்களை கற்றுக்கொடுக்கும் கல்லுாரிகளை தேர்வு செய்வதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.பொறியியலில் கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், இ.சி., இ.இ.இ., போன்ற படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இவற்றை தேர்வு செய்வதில் மாணவர்கள் முன்னுரிமை அளிக்கலாம். எந்த பிரிவு படித்தாலும் 99 சதவீதம் பேர் ஐ.டி., துறையில் தான் வேலைக்கு செல்கின்றனர். மெக்கானிக் இன்ஜி.,யை பெண்கள் தேர்வு செய்யலாம்.படிக்கும் போதே திறமை மட்டுமின்றி, புத்திசாலித் தனத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் 2021க்கு பின் பொறியியல் முடித்தவர்களுக்கு கல்லுாரிகளில் வளாக நேர்காணல் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழல் மாறி, போட்டித் தேர்வுகள் மூலம் வாய்ப்பு ஏற்படும் சூழல் அமையும். அதற்காக மாணவர்கள் தயாராக வேண்டும். உற்பத்தி மற்றும் ஆட்டோமேஷன் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும்.மருத்துவத்தை பொறுத்துவரை அரசு பள்ளி மாணவர்களை பாதிக்காத வகையில் தான் 'நீட்' தேர்வு முடிவு அமையும். இதுகுறித்து தமிழக அரசு மாற்று நடவடிக்கை எடுத்து வருகிறது. கால்நடை மருத்துவம், ஓமியோபதி, சித்தா படிப்புகளுக்கும் எதிர்காலம் உள்ளது. பாரா மெடிக்கல் படித்தால் மேல்படிப்பு கட்டாயம் படிக்க வேண்டும். கலைப் பிரிவுகளில் கணிதம், ஆங்கிலத்தை தேர்வு செய்யலாம். பி.டெக்., கட்டடக் கலை, அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ், சட்டப் படிப்புடன் கம்பெனி செகரட்டரிஷிப்பும் முடித்தால் நல்ல எதிர்காலம் உள்ளது. இவ்வாறு பேசினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive