NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உணவே... உயிரே... உறவே...:இன்று உலக உணவு தினம்

'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார் பாரதி. இன்றும் ஒருவேளை உணவுக்கு கஷ்டப்படுபவர்களும் உள்ளனர்.
அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்.,16ம் தேதி உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'இடம்பெயர்வோரின் எதிர் காலத்தை மாற்றுங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. இவர்களுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்வதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். அனைவருக்கும் உணவு என்பது மனித உரிமையாக கருதப்படுகிறது. வசதி வாய்ப்பற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் வாழ உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்கிறது ஐ.நா., சபை. மக்களின் தற்போதைய வாழ்க்கை முறையினால், உணவுப் பழக்க வழக்கமும் மாறியுள்ளது. நம் முன்னோர்கள் பயிரிட்ட பல உணவுப் பொருட்கள், இன்றைய தலைமுறையினர் சாப்பிட விரும்புவதில்லை. விரும்பினாலும் அந்த உணவுப்பொருட்கள் தற்போது கிடைப்பது இல்லை.இதற்கு காரணம் மக்களுக்கு விவசாயம் மீது ஆர்வம் குறைகிறது. முன்பெல்லாம் உலகுக்கே உணவளிக்கும் விவசாயிகளின் மீது மரியாதை இருந்தது.
தற்போதைய கால மாற்றத்தில் விவசாயிகளின் நிலை பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது. எதிர்காலத்தில் கையில் பணம் இருந்தாலும் உணவு உற்பத்தி அதிகரித்தால் தான் அனைவருக்கும் உணவு கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.79.5உலகின் மக்கள் தொகையில் 79.5 கோடி பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 10.9 சதவீதம். அதிகபட்சமாக ஆப்ரிக்காவில் தான் 20 சதவீதம் பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த இடத்தில் ஆசியா (12 சதவீதம்) உள்ளது.40 உலகளவில் இடம் பெயர்ந்தோர் எண்ணிக்கை 2015ன் படி, 24.4 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2000ம் ஆண்டை விட 40 சதவீதம் அதிகம். உலகில் இடம் பெயர்வோர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் 15 - 34 வயதுக்குட்பட்டவர்கள். இதில் பாதி பேர் பெண்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive