Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குறிப்பிட்ட கல்லூரிகளில் மட்டும் வளாக நேர்காணல் தேர்வு நடத்துவது ஏன்?

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எஸ்.கே.நடராஜன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘என்னுடைய மகள் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். தமிழகத்தில் ஏராளமான தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் இருந்தும், குறிப்பிட்ட சுமார் 30 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மட்டும் தான் ‘கேம்பஸ் இன்டர்வியூ‘ என்று அழைக்கப்படும் கல்லூரி வளாக நேர்காணல் தேர்வை பிரபலமான, பெரிய தனியார் நிறுவனங்கள் நடத்துகின்றன. இதனால் பிறகல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, அனைத்து என்ஜினீயரிங் மாணவர்களும் பயன்பெறும் விதமாக மாநில அளவில் இதுபோன்ற தனியார் நிறுவனங்களின் நேர்காணல் தேர்வு நடத்த உத்தரவிடவேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். பின்னர், அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், சுயநிதி தொழில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு, இந்திய கல்வி வளர்ச்சி சங்கம் ஆகியவற்றை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிடுகிறேன்.
இந்த வழக்கில் மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு தீவிரமானதாக உள்ளது. வளாக நேர்காணல் தேர்வை நடத்தும் 13 தனியார் நிறுவனங்களின் பெயரை எதிர்மனுதாரர்களாக இந்த வழக்கில் மனுதாரர் சேர்த்துள்ளார். எனவே ஆந்த தனியார் நிறுவனங்கள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்.
தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் கடந்த 2010 முதல் 2017–ம் ஆண்டு வரை எத்தனை நேர்காணல்கள் நடத்தப்பட்டுள்ளன?, அந்த கல்லூரிகளின் பெயர், விவரம் என்ன?, எந்த அளவுகோலின் அடிப்படையில் நேர்காணல் நடத்த இந்த கல்லூரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன?, கடந்த 7 ஆண்டுகளில் இந்த நேர்காணலில் எத்தனை மாணவர்கள், எந்த கல்லூரிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்?, அதில் எத்தனை மாணவர்களுக்கு பணிநியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளன?, சில கல்லூரிகளில் மட்டும் இதுபோன்ற நேர்காணல் நடத்துவது ஏன்?, அந்த கல்லூரியின் புகழை உயர்த்தி, அந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இவ்வாறு நேர்காணல் நடத்தப்படுகிறது என்று கூறப்படுவது உண்மையா?, இந்த நேர்காணல் தேர்வு குற்றச்சாட்டு குறித்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தெரியுமா?, இந்த கேள்விகளுக்கு 23–ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்.  இவ்வாறு தனது உத்தரவில் கூறியிருந்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive