அதிக பட்சம் 1 மாதத்திற்குள் உண்மைத் தன்மைச்சான்று

10,12 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் உண்மைத் தன்மை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அறியப்பட்ட அதிக பட்சம் 1 மாதத்திற்குள் உண்மைத் தன்மைச்சான்று வழங்கப்படுகிறது.

பள்ளிக் கல்வித்துறையைப் பொறுத்தவரை தலைமையாசிரியர் நேரிடையாக முதன்மைக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்து  உண்மைத் தன்மைச்சான்று  பெறலாம்.
 தொடக்கக் கல்வி துறையைப் பொறுத்த வரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கு விண்ணபிக்கவும், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்பி அங்கு உண்மைத் தன்மை அறியப்பட்டு சம்பந்ததப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலருக்கு நேரிடையாக உண்மைத் தன்மைச்சான்று அனுப்பி வைக்கப்படும்.
 இதற்காக எந்தக் கட்டணமும் வசூல் செய்யப்படுவதில்லை. உண்மைத் தன்மைச்சான்று பெற காலதாமதம் ஏற்பட்டாலோ, இதற்காக யாரும் பணம் கேட்டால் தகவல் தெவிக்கவும்.
மேலும் சில இடைத்தரகர்கள்  நான் உண்மைத் தன்மை வாங்கித் தருகிறேன் என்று 500, 1000 கேட்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அப்படிக் கொடுத்து யாரும் ஏமாறவேண்டாம்

Share this